கொரோனா எதிரொலி..! கடும் வீழ்ச்சியில் இந்திய பங்குச்சந்தை..! 

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருவதால் முதலீட்டாளர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.இதன்மூலம் முதலீட்டாளர்களின் பங்கு 5 லட்சம் கோடி மதிப்பு சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

உலக அளவில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளிடையே மெல்ல மெல்ல பரவ தொடங்கியுள்ளது.இதன் காரணமாக பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்த அச்சத்தை ஒட்டி பங்கு சந்தைகள் சரிவுடன் காணப்படுகிறது.

அந்த வகையில் தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச் சந்தை சரிவை நோக்கி செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கும் மேலாக குறைந்து உள்ளது

தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 400 புள்ளகளுக்கும்மேலாக வீழ்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லாபம் கனடா நிறுவனங்கள்

மாருதி சுஸு கி, ஐஓசி நிறுவனங்கள் லாபம் கண்டன 
 
நஷ்டம் அடைந்த நிறுவனங்கள் 

Vedanta ,Tata Motors, M&M,Tech Mahindra, Hindalco உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன