தினம் தினம் கொல்லும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த பாதிப்பில் இருந்து அரசன் முதல் ஆண்டி வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதற்கு சாட்சியாக கனடா பிரதமர் மனைவி சோபி கிரிகிரிகோயர் தான். 

T.Balamurukan

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோபி கிரிகோயர் ட்ரூடோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் இருந்து திரும்பிய போது காய்ச்சல் பாதிப்புடன் காணப்பட்டார். இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அங்குள்ள மருத்துவக் குழுவினர் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறார்கள்.. தனது உடல்நலனில் அக்கறை கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் சோபி ட்ரூடோ நன்றி தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் பூரண நலமடைந்து திரும்புவேன் என்று சமூக வலைதளங்களில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.