நடிகர் செந்தில் அதிமுக சார்பாக தமிழகத்தில் சில பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வருகிறார்.
திரைப்பட காமெடி நடிகர் செந்தில் மற்றும் அவரது குடுபத்தாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் அவரது மனைவி, மகன் மற்றும் மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து செந்தில் தனது குடும்பத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நடிகர் செந்தில் அதிமுக சார்பாக தமிழகத்தில் சில பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வருகிறார். அவரது மகன் சாலிகிராமம் பகுதியில் பல் மருத்துவமனையை நடத்தி வருகிறார்.
