கொரோனாவுக்கு டஃப் கொடுக்கும்  நம் மக்கள்..! சேலையில் கொரோனா வைரஸ்...!

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸுக்கு 73 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் நான்கு பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இந்த ஒரு நிலையில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்று நாம் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி கை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கைகுட்டையை பயன்படுத்துதல் வேண்டும். பொது இடங்களில் கூட கூடாது என பல்வேறு விஷயங்களை சொல்லப்படுகிறது

இன்னும் சொல்லப்போனால் நாம் மற்றவர்களை விட்டு சற்று தள்ளி இருந்தாலே நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஒரு நிலையில்முதன் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் சிகிச்சை எடுத்து வருகிறார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதால் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஒரு நிலையில் சேலையில் கொரோனா வைரஸ் படம் போட்டு டிசைன் செய்து சேலையை உருவாக்கியுள்ளனர். இந்த சேலையில் முழுக்க முழுக்க ஆங்காங்கே கொரோனா வைரஸ் இருப்பது போன்ற காணப்படுகிறது. அதாவது பொதுவாக சேலையில் பூக்கள் டிசைன் செய்வது வழக்கம். தற்போது கொரோனா வைரஸ் போன்று ஆங்காங்கு டிசைன் செய்து உள்ளனர்.

இந்த சேலை சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்கும் நம்ம மக்கள் கொரோனா வைரஸை எப்படி எல்லாம் கிண்டல் செய்கிறார்கள்.. பாருங்கள் என்றும், நம்ம மக்கள் கொரோனா வைரசுக்கே டஃப் கொடுப்பார்கள் போல... என சிலரும், கொரோனா வைரஸ் தமிழக மக்களை ஒன்றும் பண்ண முடியாது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.