கொரோனா எதிரொலி..! பணத்தை கட்டிவிட்டு... பரிதவிக்கும் மக்கள்..!

உலகம் முழுவதும் பரவி வரும் வைரஸ் தாக்கத்தால் தற்போது இந்தியாவில் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடு செல்ல காத்திருந்த சுற்றுலா பயணிகள் பணத்தை  செலுத்திவிட்டு திரும்ப பெற முடியாமல் தவித்து வருகின்றனர்

அதாவது ஒவ்வொரு வருடமும் கோடை காலம் வந்தால் விடுமுறை நாட்களில் வெளியூர் செல்வதற்கும், வெளிநாடு செல்வதற்கும்  முன்பாகவே குழுக்களாக விமான டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்வதற்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்துள்ளது. அதற்கான விசாவும் கிடைத்து உள்ளது. ஆனால் தற்போது கொரோனா தாக்கம் உலகளவில் பெரும் பிரச்சனையாக மாறி உள்ளதால் அந்த விசா செல்லாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் கட்டப்பட்ட பணம் திரும்ப கொடுக்கப்பட மாட்டாது என விமான சேவைகள் தெரிவித்து விட்டனர். இதன் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் பயணிகளும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மற்றொரு பக்கம் கொரோனா பயம் இருந்தாலும் பணத்தையும் கட்டி விட்டு அதனை திரும்ப பெற முடியவில்லையே என வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய அரசுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மத்திய அரசும் ஒரு சில விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளது. அதன்படி இப்போது போக முடிவயவில்லை என்றாலும் அடுத்த சில மாதங்களுக்கு பின்னர், சென்று வருவதற்கு ஏதுவாக மாற்றி அமைக்க முயற்சி செய்கிறோம் என சில விமான சேவைகள் முன்வந்து தெரிவித்து உள்ளனர். ஆனால் கட்டப்பட்ட தொகை வழங்கப்படமாட்டாது என்பதில் தெளிவாக இருக்கின்றது நிர்வாகம். இது ஒரு பக்கம் இருக்க இந்த ஆண்டு சுற்றுல மேற்கொள்ளும் மக்களின் விகிதம் 75% குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த ஒரு நிலையில், சீனா, இத்தாலி, சிங்கப்பூர், ஈரான், சீனாவுக்கு செல்ல வேண்டாம் என பரவலான கருத்தும் சொல்லப்படுகிறது.