"வீடுகளில்" பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் அதிகரிப்பு! ஆணையம் கவலை..!  

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்துகொண்டிருக்கிறது. 

தமிழ்நாட்டில் 3 நாட்களில் 287 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 364 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்பதை சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருக்க கிடைந்த இந்த பொன்னான நேரத்தை குடும்ப உறுப்பினர்கள் உடன் மகிழ்ச்சியாக செலவிடுங்கள் என அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வெளியாகியுள்ள பகீர் தகவல் ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதாவது ஊரடக்கு காலத்தில் வீடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய பெண்கள் ஆணையம் வேதனை தெரிவித்துள்ளது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட முதல் நாளில் இருந்து, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து 257 புகார்கள் வந்துள்ளதாம். மார்ச் மாத ஆரம்பத்தில் வெறும் 3 புகார்களே வந்திருந்த நிலையில், 10 நாட்களில் இப்படி அதிரடியாக புகார்கள் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.