ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் அடுத்தடுத்த அறிவிப்பு..! 

அதி தீவிரமாக பரவி வரும் கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.மேலும் மக்கள் நடமாட்டம் குறைய 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டு இருந்தாலும் பல இடங்களில் மக்கள் நடமாட்டம் பார்க்க முடிகிறது. இந்த ஒரு நிலையில் அதனை கட்டுப்படுத்தும் பொருட்டும் கொரோனா பரவுதலை தடுக்கும் பொருட்டும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அரசு. 

இந்த ஒரு நிலையில், நாளை (27-03) மற்றும் நாளை மறுதினம் (28-03) கோயம்பேடு வணிக வளாகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து கேட்களும் பூட்டப்பட்டு யாரும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள் என சிஎம்டிஏ நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது 

கொரோனா

கொரோனாவிற்கு ஒரே நாளில் இத்தாலியில் 683 பேரும், ஸ்பெயினில் 656 பேரும், ஈரானில்143 பேரும், பிரான்ஸில் 231 பேரும், நெதர்லாந்தில் 80 பேரும், பெல்ஜியத்தில் 56 பேரும் உயிரிழந்து உள்ளனர் என்பது மேலும் அதிர்ச்சி தரும் விஷயமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும்... சர்வதேச அளவில் 2,300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா எதிரொலி:

இன்றுமுதல் ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் சுங்க கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் அறிவித்துள்ளது

விதியை மீறுவோர் மீது வழக்கு பதிவு..!

கரூர் - 144 தடை உத்தரவை மீறியதாக 23 பேர் கைது செய்துள்ளது.மேலும் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதே போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 220 பேர் மீது 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சேலத்தில்1,027 வழக்குகள் பதிவு செய்து 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன

திருமணம் நிறுத்தம் 

பொள்ளாச்சியில் முடிவு செய்யப்பட்டு இன்று நடக்கவிருந்த சுமார் 60 கல்யாணங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது