Asianet News TamilAsianet News Tamil

மார்ச் 10 முதல் 17 ஆம் தேதி வரையில் யாரெல்லாம் ஃபீனிக்ஸ் மால் போனீங்க? வெளியானது அதிர்ச்சி தகவல்!

கடந்த நாட்களில் இவர்கள் எங்கெல்லாம் சென்று வந்தார்கள் என விவரம் அறிந்து  தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது .

corona alert:who are all visited chennai phoenix mall life style inbetween 10th to 17th of march
Author
Chennai, First Published Apr 2, 2020, 8:13 PM IST

மார்ச் 10 முதல் 17 ஆம் தேதி வரையில் யாரெல்லாம் ஃபீனிக்ஸ் மால் போனீங்க? வெளியானது அதிர்ச்சி தகவல்! 

மிகவும் கட்டுக்போப்பாக இரவு பகல் பாராமல் கொரோனா பரவுவதை தடுக்க மத்திய அரசு மட்டுமின்றி தமிழக அரசும் பெரும் முயற்சி எடுத்து வந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக தில்லியில் நடைபெற்ற இஸ்லாம் மத  கூட்டத்திற்கு சென்று வந்த பெரும்பாலோனோருக்கு கொரோனா தோற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது  
 
இவர்களில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309ஆக உயர்ந்து உள்ளது. இதில் 74 பேர் டில்லி மாநாட்டில் கலந்துகொண்டு ஊர் திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த நாட்களில் இவர்கள் எங்கெல்லாம் சென்று வந்தார்கள் என விவரம் அறிந்து தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது

corona alert:who are all visited chennai phoenix mall life style inbetween 10th to 17th of march

நிலைமை இப்படி இருக்க வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் வேலை செய்த 3 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்களுடன் வேலை செய்த மற்றவர்களையும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது 

எனவே மார்ச் 10 ஆம் தேதியில் இருந்து17ஆம் தேதி வரை பீனிக்ஸ் மாலிற்கு(குறிப்பாக லைப் ஸ்டைல் ) சென்று வந்தவர்கள் மற்றும் உடன் வேலை செய்தவர்கள் என அனைவரும் கவனமாக இருக்கும்படியும், கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக 044 25384520 மற்றும் 0444612300 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios