பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கும் "கொரோனா"! காரணம் இதுதானோ.?

உலக நாடுகளை பெருமளவு அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு 190 நாடுகளுக்கும் மேலாக பரவி உள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா, இன்றைய நிலையில் அங்கு கட்டுப்படுத்தப்பட்டாலும் மற்ற உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது,

நன்கு வளர்ச்சி அடைந்த நாடுகளின் அமெரிக்கா, ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி என  மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சடலங்களை எங்கு புதைப்பது என கூட முடியாமல் அரசே திணறுகிறது. 

அமெரிக்கா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் ஐஸ் கட்டி மைதானத்தில் சடலங்களை அடுக்கி வைக்கும் சூழல் நிலவுகிறது. அமெரிக்காவில் நியூயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட இடங்களில் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க கூட மருத்துவமனையில் இடமில்லை.

இது ஒரு பக்கம் இருக்க... சடலங்கள் மூடுவதற்கு தேவைப்படும் பிளாஸ்டிக் பைகளை அமெரிக்க ராணுவம் ஆர்டர் செய்துள்ளது. இந்த ஒரு நிலையில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களில் பாலினம் விகிதம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பெண்களை விட ஆண்களே அதிகளவு பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை 3.4 சதவீதமாக இருக்கும் நிலையில் ஆண்களின் இறப்பு விகிதம் 9.2 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வானது இத்தாலி,ஸ்பெயின்,பிரான்ஸ்,ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டு உள்ளது. இந்த ஆய்வில் பலியானர்களில் 71 % பேர் ஆண்கள் என தெரியவந்துள்ளது. இதற்கான சரியான காரணம் தெரியவில்லை என்றாலும், ஆண்களுக்கு பொதுவாக புகைபிடித்தல் மது அருந்தும் பழக்கம் உள்ளதால் மிக எளிதாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என கருதப்படுகிறது.