தமிழகத்திற்கு "பெரிய ஆறுதலே" இதுதான்..! மற்ற நாடுகளில் இருந்து மாறுபடும் இந்தியா..!

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாளுக்கு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இன்னொரு பக்கம் வீடு திரும்புவோரின் எண்ணிக்கையில் அதிகரிக்கிறது தற்போதைக்கு இதுதான் சற்று ஆறுதலை கொடுத்து உள்ளது.

இந்தையாவில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரையில், அமெரிக்கா, இத்தாலியில் ஏற்பட்டபாதிப்பு போல் இல்லை. அதேசமயம் நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்கள் சிகிச்சைமுடிந்து வீடு திரும்பி உள்ளனர் 

ஊரடங்கு உத்தரவு, தன்னலமற்று பணியாற்றும் சுகாதார துறை ஊழியர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவலர்களை என அனைவரும் இதில் முக்கிய பங்கு ஆற்றுகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 1683 என்ற நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 752 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 90 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 908 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் மொத்தம் 23,077 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4749 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளது ஆறுதல் தரும் விஷயமாக அமைந்து உள்ளது. ஆனால் 718 பேர் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதித்தவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டால் சிகிச்சையளிக்க மொத்தம் 3371 வென்டிலேட்டர்கள் உள்ளது. 29 ஆயிரத்து 74 தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளும் உள்ளன. ஆனால் அதற்கான தேவை ஏற்படாமல் கொரோனாவில் இருந்து விடுபட்டாலே போதுமானது என்பதே அனைவரின் விருப்பம்.