Asianet News TamilAsianet News Tamil

கொரோனா 3வது அலை மிகக்கொடூரமானது... கனடா மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை..!

1917-1919 ஆம் ஆண்டின் ஸ்பானிஷ் காய்ச்சலைப் போலவே, மூன்றாவது அலை முதல் மற்றும் இரண்டாவது அலைகளை விட ஆபத்தானது என்று வரலாறு சொல்கிறது

Corona 3rd wave is terrible ... Canadian doctors issue stern warning
Author
India, First Published May 17, 2021, 4:10 PM IST

இந்தியாவைத் தாக்கும் மூன்றாவது அலை குறித்து கனடாவை சேர்ந்த டொரோண்டா அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களான டாக்டர் பார்த்தசாரதி, டாக்டர் சரஸ்வதி பார்த்தசாரதி ஆகியோர் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா அதிகரித்துள்ளதால் முற்றிலும்  வெளியே செல்லவே வேண்டாம். கண்டிப்பாக குழந்தைகள் சிறுவர்கள், முதியவர்கள் போகவே கூடாது. 

மிக அத்தியாவசியம் எனில் நீங்கள் வெளியே செல்லும் போது இரட்டை முகமூடி மற்றும் எந்த நேரத்திலும் முகமூடியை வெளியே வைத்து கழற்றவோ தாடிக்கு மட்டும் பயன் படுத்தவோ கூடாது. உங்கள் வீட்டிற்கு வெளியே சாப்பிட வேண்டாம்.Corona 3rd wave is terrible ... Canadian doctors issue stern warning

உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீடுகளுக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு செல்லவே வேண்டாம். இது மிகவும் முக்கியம் 
இதை இந்தியாவில் மக்கள் மிகவும் இலகுவாகவே எடுத்துக்கொள்கிறார்கள். இப்போது நாம் முன்னெச்சரிக்கைகள் எடுக்காவிட்டால் நமது மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் அழிக்கப்படுவார்கள். கோவிட் பாகுபாடு காட்டவில்லை. 

மரண வீட்டிற்கு செல்வதும், திருமண வீட்டிற்கு செல்வதும் அறவே தவிர்த்து விடுங்கள் அதன் மூலம் கோவிட் செயினை அறுத்துவிடலாம்.
நீங்கள் இதனை உதாசீனபடுத்தினால் நெருங்கிவரும் நாட்களில் தினசரி மரணம் தமிழ்நாட்டில் 500, 1000 என்று கட்டுக்கடங்காத நிலையில் அதிகரித்து கொண்டே செல்லும் டாக்டர்கள் கை கட்டி பார்த்து கொண்டுதான் இருக்க முடியும்.

Corona 3rd wave is terrible ... Canadian doctors issue stern warning

அது நம் சொந்தங்களாக இருக்கும் போது எவ்வளவு கடுமையா வலியை தரும்.? ஆகவே ஆகவே மீண்டும் சொல்கிறோம் கோவிட் நிபரதனைகளை உதாசீனப்படுத்தாமல் முறையாக கடைபிடியுங்கள். ஒன்றுகூடுதலாகிய அனைத்து நிகழ்வுகளையும் நிலமை கட்டுக்குள் வரும்வரை குறைந்தது மூன்று நான்கு மாதம் தள்ளிப்போடுங்கள். நாம் அனைவரும் முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே மூன்று அ நான்கு மாதங்களில் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரலாம். 

கனடாவிற்கு உள்ளேயும், வெளியேயும் விமானங்களைத் தடைசெய்கிறது, வரும் காலங்களில் இங்கும் தினசரி இறப்பு எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டும். ஆனால் அரசின் அபார உழைப்பினால் மருத்துவர்களின் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.  வளைகுடா நாடுகள் பெரும்பாலும்  உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் விமானங்கள் வருவதை போவதை விரும்பவில்லை மட்டுமல்லாதுநிறுத்தி வைத்துள்ளது.

Corona 3rd wave is terrible ... Canadian doctors issue stern warning

கொரோனாவின் மூன்றாவது அலை  முதல் அலையை விட மிகவும் ஆபத்தானது. எனவே, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அத்துடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மூன்றாவது அலை வரவிடாமல் அனைவரையும் காப்பாற்றுங்கள். இரண்டாவது அலை போல இருக்கும் என்று நீங்களே  தீர்ப்பளிக்க வேண்டாம். 1917-1919 ஆம் ஆண்டின் ஸ்பானிஷ் காய்ச்சலைப் போலவே, மூன்றாவது அலை முதல் மற்றும் இரண்டாவது அலைகளை விட ஆபத்தானது என்று வரலாறு சொல்கிறது’’எனக் கூறி உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios