Asianet News TamilAsianet News Tamil

உஷார் மக்களே..! 4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கட்டாயம் ஹெல்மெட்..!

மிதிவண்டியில் செல்வதற்கே அதற்கேற்றவாறு ஹெல்மெட் கிடைக்கும் போது  குழந்தைகளுக்கான ஹெல்மெட் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. 

compulsory helmet for above 4 yrs children
Author
Chennai, First Published Aug 13, 2019, 3:09 PM IST

நான்கு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளும் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட்   அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவில் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் குழந்தைகளுக்கான சில கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி சட்டப்பிரிவு 129 இல் , சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் நான்கு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

compulsory helmet for above 4 yrs children

மிதிவண்டியில் செல்வதற்கே அதற்கேற்றவாறு ஹெல்மெட் கிடைக்கும் போது குழந்தைகளுக்கான ஹெல்மெட் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. கட்டாயம் ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் இனி உயிரிழப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது  

 

compulsory helmet for above 4 yrs childrenதலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மீது இதுவரை 8.21 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இனி ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்பதால் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதை தவிற்குமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios