5 மாநகராட்சியில் முழு ஊரடங்கு..! சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் சேலத்தில் பயங்கர கட்டுப்பாடு..!
சேலம் மற்றும் திருப்பூரில், ஞாயிறு முதல் செவ்வாய் கிழமை வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஐந்து மாநகராட்சி தவிர பிற இடங்களில், தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
5 மாநகராட்சியில் முழு ஊரடங்கு..! சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் சேலத்தில் பயங்கர கட்டுப்பாடு..!
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஐந்து மாநகராட்சிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி சென்னை கோவை மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய் கிழமை வரை மூன்று மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அதே போன்று,சேலம் மற்றும் திருப்பூரில், ஞாயிறு முதல் செவ்வாய் கிழமை வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஐந்து மாநகராட்சி தவிர பிற இடங்களில், தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முழு ஊரடங்கு உள்ள 5 மாநகராட்சிகளில் மிக மிக அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஐந்து மாநகராட்சிகளில் நடமாடும் காய்கறி வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் பிற காய்கறி கடைகளுக்கு அனுமதி கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் மட்டும் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்றும், பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது என்றும் தெரிவித்து உள்ளது. முதியோர் மாற்றுத் திறனாளி ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது. உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது
கொரோனா பரவல் வேகமாக வேகமாக பரவும் பகுதிகளான(ரெட் ஸ்பாட்) பகுதிகளில் இந்த 5 மாநகராட்சியில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்