கவனம் மக்களே!  5 மாநகராட்சிகள் மட்டுமல்ல...முழு ஊரடங்கு பிறப்பித்துள்ள மற்ற பகுதிகள் எது தெரியுமா? 

நாளை முதல் புதன் கிழமை வரையில் சென்னை மதுரை கோவை மாநகராட்சியில் முழு ஊரடங்கு உத்தரவும், சேலம் திருப்பூரில் ஞாயிறு முதல் செவ்வாய் வரையில் 3 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுத்து உள்ளது. அதன் படி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.இது தவிர மற்ற மாவட்டத்தின் பல பகுதிகளிலும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது.

அதன் படி, செங்கல்பட்டு மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது.அதன் படி தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகள், 5 பேரூராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு உள்ளது. புனிததோமையார் மலை ஊராட்சி ஒன்றியம், கோவிலம்பாக்கம் உட்பட15 கிராம ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். இங்கு ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 இரவு 9 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தவிர காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை மாநகர எல்லைக்குள் வரும் பகுதிகளிலும்,கடலூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழுஊரடங்கும், நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளையும் மூட உத்தரவு பிறப்பித்து  மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்க உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்து உள்ளார் 


முழு ஊரடங்கு உத்தரவு எதிரொலோயால் நாளை முதல் 4 நாட்களுக்கு கோயம்பேடு காய்கறி சந்தை விடுமுறை என வியாபாரிகள் சங்கம் அறிவித்ததை அடுத்து நாளை முதல் புதன் கிழமை வரை கோயம்பேடு சந்தையில் கடைகள் திறக்கப்படாது. மொத்த விற்பனை கடைகள் மட்டும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த 5 நகராட்சி மக்கள் இன்றே காய்கறி வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.