colour code and road
நாம் நீண்ட தூரம் பயணிக்கும் போது, சில சமயத்தில் வழி தெரியாமல் யாரிடமாவது கேட்பது உண்டு. அதுவும் இரவு நேரத்திலோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாமலோ நிருந்தால் எப்படி வழி கேட்பது ? எந்த திசையில் செல்ல வேண்டும் ? என பல கேள்விகள் எழும்.
இதுபோன்ற சமயத்தில், நாம் செல்லும் வழியில் உள்ள மைல் கல்லை பார்த்தே தெரிந்துக்கொள்ளலாம். நாம் எந்த சாலையில் பயணித்து கொண்டிருக்கிறோம் என்பதை...
பொதுவாகவே சாலையில் உள்ள மைல் கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை , பச்சை, நீலம், பிங்க் என பல நிறங்களில் மைல் கல்லை பார்த்து இருப்போம்
மைல்கல்லின் நிறம் மற்றும் சாலை
மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம் - தேசிய நெடுஞ்சாலை
பச்சை மற்றும் வெள்ளை நிறம் – மாநில நெடுஞ்சாலை
நீலம் மற்றும் வெள்ளை நிறம் – மாவட்ட சாலை
பிங்க் அல்லது கருப்பு மற்றும் வெள்ளை நிறம் - ஊரக சாலை அல்லது கிராம புற சாலை என புரிந்துக்கொள்ளலாம்.
இவ்வாறு நாம் பயணிக்கும் வழியில் உள்ள , மைல் கல்லை வைத்தே அது எந்த சாலை என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.
