16ஆம் தேதியுடன் அத்தி வரதர் தரிசனம் முடிவு பெறுகிறது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்

அப்போது, 

"வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும் எனவும்,15ம் தேதியான  நாளை 12 மணி பிறகு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும் என்றும் அதன்பிறகு 12 முதல் 8மணி வரை கருட சேவை நடைபெற்ற பிறகு, மீண்டும் 8 மணி முதல் பொது  தரிசனத்திற்கு அனுமதிக்க்கப்படுவார்கள்...

16ஆம் தேதி மற்றும் 17 ஆம் தேதி விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொது தரிசனம் மட்டுமே நடைபெறும். குறிப்பாக 17ஆம் தேதி ஆகம விதிப்படி அத்தி வரதரை அமிர்தசரஸ் குளத்தில் வைக்கப்படும் என்பதற்காக 16 ஆம் தேதியில் இரவே தரிசனம் நிறைவு பெறும் என்றும் தெரிவித்துள்ளார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா.

அத்தி வரதர் வைபவம் நிகழ்வில் இந்த 48 நாட்களும் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் சிறப்பாக செயல்பட்டு உள்ளதாகவும், பல லட்ச மக்கள் அத்தி வரதர் தரிசனத்தை நிறைவு செய்து உள்ளனர் தெரிவித்து  உள்ளார்.

தொடர்ந்து பேசிய பொன்னையா... 17 ஆம் தேதியன்று மாலையோ அல்லது அன்று இரவுக்குள் அமிர்தசரஸ் குளத்தில் அத்தி வரதர் வைக்கப்படுவார் என தெரிவித்து உள்ளார்.