தேங்காய் எண்ணெய் - நல்லெண்ணெய்..! இது தெரியாமல் இப்படி மாற்றி பயன்படுத்தாதீர்கள்..! 

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நம்மவர்கள் குறிப்பாக உடல் சூட்டை தணிப்பதற்காக தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கமாக வைத்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக தேங்காய் எண்ணெய் என்றால் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். சமையலிலும் தேங்காய் எண்ணெய் சேர்ப்பது நல்லது. தலைக்கு வைப்பதும் தேங்காய் எண்ணெய் நல்லது.

தேங்காய் எண்ணெயை பொருத்தவரையில் அதிக மருத்துவ குணங்களை கொண்டது. உடலுக்கு மிகவும் நல்லது. உடல் சூட்டை தணிக்க கூடியது. அதேபோன்று நல்லெண்ணெயும் மிக முக்கியமான ஒன்று. தினமும் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும். வாரத்தில் ஒரு நாள் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு குறைய தொடங்கும். தலைவலி, உடல் வலி அனைத்தும் குறைந்துவிடும்.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மென்பொறியாளர்கள் அல்லது எப்போதும் கம்ப்யூட்டர் முன்னாடி அமர்ந்து கொண்டு வேலை செய்யும் நபர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாக இது கருதப்படுகிறது. அதாவது திரைக்கு முன்னால் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் தினமும் நல்லெண்ணெய் சாப்பிட்டால் உடலுக்கு அந்த அளவுக்கு நல்லது ஏற்படும். நீங்கள் கட்டாயம் எண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் கணினி மூலம் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து உடல் நலத்தை பாதுகாத்து கொள்ள முடியும். 

உடல் சூட்டால் அதிக கட்டிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை போன்ற பெண்களைப் பொறுத்தவரை கர்ப்பப்பை கோளாறு எதுவும் ஏற்படாது. இன்றைய காலகட்டத்தில் குழந்தை வரம் வேண்டி பல பெண்கள் எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டு மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆனால் அதற்குப் பின்னுள்ள காரணங்களை பற்றி எதையும் யோசிப்பது கிடையாது. எனவே உடல் சூட்டை தணிக்கும் கணினி பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் மிக சிறந்த ஒன்று வாரத்திற்கு ஒரு நாள் நல்லெண்ணெய் கொண்டு குளிப்பது மிகவும் சிறந்தது.

அதேபோன்று வாயில் நல்லெண்ணையை கொஞ்சம் ஊற்றி கொப்பளித்து வந்தால் பற்கள் பளிச்சென மாறும். பற்கள் பலமாக இருக்கும். அதே போன்று உடலில் எங்கு வலி இருந்தாலும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் அந்த வலி நீங்கிவிடும். வாரத்திற்கு ஒரு நாள் நல்லெண்ணெய் கொண்டு குளித்து வரும்போது புத்தி கூர்மையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.