தேங்காய் பால் வச்சி இப்படி ஒருமுறை வெஜ் பிரியாணி செய்து பாருங்க...ருசியா இருக்கும்!
Coconut Milk Veg Biryani : தேங்காய் பால் வெஜ் பிரியாணி செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
பிரியாணி என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பிரியாணியில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று பல வகைகள் உள்ளன. அந்த வகையில் சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் வெஜ் பிரியாணி பற்றி தான் பார்க்க போகிறோம். ஆனால், எப்போதும் போல் அல்லாமல் சற்று வித்தியாசமான சுவையில், அதாவது தேங்காய் பால் கொண்டு வெஜ் பிரியாணி செய்வது பற்றி பார்க்கலாம்.
இந்த பிரியாணி சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபி செய்வதற்கு அதிகம் நேரம் எடுக்காது. மிகவும் சுலபமாக செய்து விடலாம். இந்த ரெசிபியை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் தேங்காய் பால் வெஜ் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: வெஜ் புலா ஒரு முறை இப்படி செய்ங்க.. அடிக்கடி செய்வீங்க.. ரெசிபி இதோ!
தேங்காய் பால் வெஜ் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் :
பிரியாணி அரிசி - 1 கப்
நெய் - 2 ஸ்பூன்
முந்திரி - 20
கிராம் - 5
பட்டை - 3
ஏலக்காய் - 6
பெரிய வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2 (நறுகியது)
இஞ்சி பூண்டு - 1 ஸ்பூன்
பெரிய தேங்காய் - அரை மூடி
உருளை கிழங்கு, பீன்ஸ், காலி பிளவர், கேரட், பச்சை பட்டாணி - 3 கப்
இதையும் படிங்க: மணக்க.. மணக்க ... ருசியான உருளைக்கிழங்கு பிரியாணி.. ரெசிபி இதோ!
செய்முறை :
தேங்காய் பால் வெஜ் பிரியாணி செய்ய முதலில், அடுப்பில் குக்கரை வைத்து அதில் நெய் ஊற்றி சூட்டாகவும். பின் அதில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, முந்திரி போட்டு வதக்கவும். பின் அதில் வெங்காயம் போட்டு வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்றாக வதங்கியதும், அதில் இஞ்சி பூண்டு சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் அதில் நறுக்கிய வைத்த காய்கறிகளை போட்டு வதக்கவும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். இதனுடன் எடுத்து வைத்த தேங்காயில் இருந்து பால் எடுத்து அதை அதில் ஊற்றவும். பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் அரிசி சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது குக்கரை மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும். குக்கரில் விசில் போனதும் சாதத்தை முறை கிளறிவிடுங்கள். அவ்வளவு தான் சுவையான தேங்காய் பால் வெஜ் பிரியாணி ரெடி.
இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D