Asianet News TamilAsianet News Tamil

Coca cola-வை தலையில் ஊற்றி தேய்க்கும் பிரபல நடிகை,அழகுக்காக இப்படி செய்வாங்களா?கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி

கொக்க கோலாவை கொண்டு தலைமுடியை கழுவிக் கொண்ட பிரபல மாடல்.. ஏன் அப்படி செய்தார் தெரியுமா? பதிவை முழுமையாக படியுங்கள். 

coca cola hair wash
Author
First Published Mar 18, 2023, 1:37 PM IST

பொதுவாக தலைக்கு ஷாம்பூ தேய்த்து குளிப்பதை கேள்விபட்டிருப்பீர்கள்..கோடைகாலம் வந்து விட்டதால் சிலர் தலைக்கு ஹேர் பேக் போடும் பழக்கம் கூட வைத்திருப்பார்கள். இதற்காக கற்றாழை உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்துவார்கள். ஆனால் இங்கு பிரபல மாடல் ஒருவர் கொக்க கோலாவை (Coca cola) தலையில் தேய்த்து கழுவி வருகிறாராம். ஆங்கில மாடல் ஆலிஸ் சுகி வாட்டர்ஹவுஸ் (English model Alice Suki Waterhouse) தான் இந்த விசித்திரமான முடி கழுவும் பாணியை இணையத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்த மாதிரி கொக்க கோலாவை தலைக்கு தேய்ப்பதோடு நிற்காமல், அவர் சோசியல் மீடியாவில் அதனுடைய நன்மைகள் குறித்து பகிர்ந்துள்ளார். சோசியல் மீடியாவை பொறுத்தவரை, தேவைக்கு அதிகமாகவே அதில் ஹெல்த் டிப்ஸ் பகிரப்படுகிறது. அது நன்மையா? தீமையா? என ஆராயாமல் சிலர் பயன்படுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் தான் ஆங்கில மாடல் ஆலிஸ் தலைக்கு கொக்க கோலா தேய்ப்பது நன்மையளிக்கிறது என பகிர்ந்துள்ளார். இதையடுத்து coca cola தலைமுடிக்கு அதிசயங்களை செய்யும் என்ற பிம்பம் உருவாகி வருகிறது. 

coca cola hair wash

ஆங்கில மாடல் ஆலிஸ்... கோக் தலையில் தேய்க்கும் போது அவருடைய தலை முடி மிகவும் அழகாக மாறியதாக தெரிவித்துள்ளார். இதை காணும் பலரும் அதை முயன்று பார்க்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. உண்மையில் தலைமுடிக்கு கொக்க கோலா நல்லதுதானா? சில தகவல்களின்படி, ரொம்பவும் குறைந்த pH அளவைக் கொண்ட பாஸ்போரிக் அமிலம் தான் coca cola-வில் உள்ளது. இதை தலையில் தேய்க்கும்போது முடி இழைகளின் க்யூட்டிக்கை இறுக செய்து மிருதுவாகவும், பளபளப்பாகவும், கூந்தல் அலை அலையாக இருக்கும் தோற்றத்தையும் தருகிறது. முதலில் தலைமுடியை தண்ணீரில் கழுவி, பின்னர் கோக் தேய்த்து கழுவினால், முடி காண்பதற்கு அழகாக இருக்கும். இந்த பானத்தில் உள்ள சர்க்கரை முடிக்கு கூடுதல் அளவை அளிக்கிறது. 

இதையும் படிங்க: Sleeping tips: தூக்கமின்மைக்கு தீர்வுகள்.. AI சொன்ன மேட்டரை கேளுங்க!

எல்லோருக்கும் பட்டுப்போன்ற அழகான கூந்தலைப் பெற ஆசையாக இருக்கும். அதற்காக கொக்க கோலா (coca cola) பாட்டில் வாங்கி தேய்த்தால் போதுமா? இதை தேய்க்கும் போது உச்சந்தலையையோ முடியையோ சுத்தப்படுத்தாது. இதில் உள்ள கார்ன் சிரப் மற்றும் பிற பொருட்கள் உச்சந்தலையில் தடவும்போது, கொழுப்பு, எரிச்சல், பொடுகு, முடி உதிர்தல் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. கொக்க கோலாவுடன் முடியைக் கழுவியதும் பார்க்க கூந்தல் அழகாகவும் கவர்ச்சியாகத் தோன்றினாலும், இதனால் நீண்ட கால பாதிப்புகள் ஏற்படும் என்பது உண்மைதான். ஆங்கில மாடலோ ஆண்டிப்பட்டி மாடலோ தலைக்கு தேய்க்கிறார்கள் என்பதால் நீங்கள் தலையை பாழ்படுத்தக் கூடாது மக்களே.. எச்சரிக்கையாக இருங்கள். 

இதையும் படிங்க: எப்போதும் வீட்டில் பணம் பெருகணுமா? இந்த 4 பொருள் ஒன்றாக இருக்கணும்.. அவ்வளவுதான் பண ராசி வந்திடும்..!

Follow Us:
Download App:
  • android
  • ios