கிரண்பேடியை "பேய்"ன்னு  திட்டிய முதல்வர்..! வேற லெவலில் மோதிக்கொள்வதால் பரபரப்பு ..!

புதுவை முதல்வர் நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண்பேடி க்கும் இடையே எப்போதும் ஓர் பனிப்போர் இருப்பது வழக்கம். அவ்வப்போது இருவரும் வார்த்தை ஜாலங்களால் மோதிக் கொள்வார்கள்.

ஆளுநரின் தலையீடு மாநில ஆட்சியில் அதிகமாக இருப்பதால் பல முக்கியத் திட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது. மக்களுக்கு நல்ல பயனுள்ள திட்டங்கள் செல்வதில்லை என முதல்வர் நாராயணசாமி அவ்வப்போது போர்க்கொடி தூக்கி வந்தார். இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடியை "பேய்" என விமர்சனம் செய்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் நாராயணசாமி.

அக்டோபர் 31-ம் தேதியான நேற்று முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பாக, புதுவையில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார். அப்போது மக்களிடையே உரையாற்றும்போது, கிரண்பேடி "மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் பேய்" என விமர்சனம் செய்து பேசினார்.

இதற்கு கிரண்பேடி கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து கிரண்பேடி தெரிவிக்கும்போது முதல்வர் அநாகரிகமாக பேசுகிறார். பேய் மக்களை பயமுறுத்தக்கூடியது. நல்லது செய்யாது. ஆனால் அரசு அதிகாரி பணி மக்களைப் பாதுகாப்பது என பதிலடி  கொடுத்து உள்ளார். இதற்கு முன்னதாக, நாராயணசாமி கிரண் பேடிக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் போது, ஒரு காகத்தின் போட்டோவை பதிவிட்டது, நாராயணசாமியை கிண்டல் செய்வதாக அமைந்து விட்டது என பெரும் விவாதமே நடைபெற்றது. 

இந்த நிலையில், கிரண்பேடியை பேய் என குறிப்பிட்டு நாராயணசாமி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது