நம்ம ஊரு கிராமத்து "வைக்கோல் போர்" தெரியுமா..? ரூ.778 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஆச்சர்யம்..!

சிறப்பு வாய்ந்த பல ஓவியங்களை விலை கொடுத்து வாங்க ஓவிய பிரியர்கள் எங்கு ஏலம் நடந்தாலும் நாடுவிட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் கூட செல்ல தயங்க மாட்டார்கள். அந்த வகையில் ஒரு சில ஓவியங்கள் சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்களை கடந்து பல கோடிகளில் கூட ஏலத்தில் எடுக்கப்படும் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரமே நமக்கு புரியவைக்கும்.

அந்த வகையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மொனெட். மிகவும் பிரபலமான இவர் தன்னுடைய 86 ஆவது அகவையில் 1926 ஆம் ஆண்டு காலமானார். இவருடைய காலங்களில் இவர் தீட்டிய ஓவியங்கள் பலராலும் கவரப்பட்டது. இவருடைய ஓவியத்தை வாங்குவதற்காகவே பலரும் போட்டி போட்டு வரிசையில் காத்திருப்பார்களாம். அந்த வகையில் ஒவ்வொரு ஓவியமும் தனித்துவம் வாய்ந்தவையாகவும், ஆழமான கருத்து அடங்கியதாகவும் இருக்கும்.

அவ்வாறு அவர் தீட்டிய ஓவியங்களில் ஒன்றான 1890 ஆம் ஆண்டு வரையப்பட்ட "மீலெஸ்" என்ற பெயரில், கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு வரைந்த ஓவியமான வைக்கோல் ஓவியம் ஏலத்திற்கு வந்தது.

இந்த ஓவியம் நாம் யாரும் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத அளவிற்கு அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இத்தனை ஆண்டுகள் கழித்து ஏலத்திற்கு வந்த இந்த வைக்கோல் ஓவியம் மீதான ஏலம் 8 நிமிடத்திற்கு மேலாக நடந்தது. பின்னர் சுமார் 110.7 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது. அதாவது இந்திய மதிப்பில் சொல்ல வேண்டும் என்றால் ரூ.778 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது .