தேனிலவாக இருந்தாலும் சரி, புத்தாண்டு கொண்டாட்டமாக இருந்தாலும் சரி, பெரும்பாலானோர் கோவா செல்வதையே விரும்புகின்றனர். ஆனால் இந்த பதிவில் கோவாவுக்கு மாற்றாக இருக்கும் புதிய இடம் குறித்து தெரிந்துகொள்வோம்.
எந்தவிதமான கவலைகளும் இல்லாமல் கடலோரத்தில் காலார நடப்பதையும் பேசி சிரிப்பதையும் மக்கள் பலர் விரும்புகின்றனர். அதற்காக பலரும் தேர்வு செய்யும் இடம் என்பது கோவா தான். முன்னொரு காலத்தில் கோவா சிக்கனமான சுற்றுலாத் தளமாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. அதனுடைய தகுதியே வேறு. அந்த வகையில் செலவை காரணம் காட்டி, பலரும் கோவா செல்லும் ஆசையை கட்டுப்படுத்தி விடுகின்றனர். இந்நிலையில் கோவாவை போலவும் அதேசமயத்தில் செலவு கட்டுபடியாகும் விதத்திலும் ஒரு இடம் உள்ளது. அதுகுறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்.
இந்தியளவில் தேனிலவு பயணத்துக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கும் பெயர்போன பகுதி கோவா. ஆனால் இப்போது கோவாவில் செலவு அதிகரிப்பதாக பலரும் கவலைப்படுகின்றனர். அதற்கு மாற்றாக கிடைத்துள்ள மற்றொரு பகுடி தான் சுக்கா. இது உத்தரப் பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த இடம் குறித்து வெகு சிலருக்கே தெரியும். ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்வுகளை காரணமாக வைத்து கோவாவுக்கு செல்பவர்கள், இந்த சுக்கா கடற்கரைக்கு சென்றுவரலாம்.
இந்த கடற்கரை உ.பி.யின் பிலிபிட் புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ளது. காடுகளுக்கு நடுவிலுள்ள சுக்கா கடற்கரை மிகவும் வசீகரமான பின்னணியில் அமைந்துள்ளது. நேபாளத்தில் இருந்து வரும் சாரதா கால்வாய் இந்த சுக்கா கடற்கரையில் தான் சந்திக்கிறது. நீங்கள் இங்கு செல்ல விரும்பினால் பிலிபிட் புலிகள் காப்பகத்தின் அதிகாரப்பூர்வ https://pilibhittigerreserve.in/ என்கிற இணையதளத்தில் பதிவு செய்யலாம். சுற்றுலாப்பயணிகள் நின்று இயற்கையை ரசிப்பதற்கான மரக் குடில், பூட் குடில், தண்ணீர் குடில் என பல வகையான இடங்கள் உள்ளன.
கிறிஸ்துமஸுக்கு தயாரிக்கப்படும் விசேஷமான கேக்- தெரியுமா உங்களுக்கு..?
ஜூன் முதல் நவம்பர் வரை இங்கு சீசன் காலமாகும். கடற்கரையில் நீர் சலசலக்கும் சத்தம் உங்கள் காதுகளுக்கு இனிமையாக கேட்க்ம். இந்த பகுதியில் அமைந்துள்ள ஏரி 17 கிலோமீட்டர் நீளமும் 2.5 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. நீங்கள் நண்பர்களுடன் அல்லது உங்கள் துணையுடன் அழகான தருணங்களை இங்கே செலவிடலாம். இங்கு நடைபெறும் கேம்ப்ஃபயர்களையும் மிகவும் பிரபலமாகும். இங்கு மது மற்றும் அசைவ உணவுகள் அனுமதி கிடையாது. இயற்கையையும் வனவிலங்கு நலனையும் காப்பாற்ற பாலித்தீன் பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதி கிடையாது.
இங்கு போவதற்கு நீங்கள் பிலிபிட் ரயில் நிலையத்தில் இறங்கி செல்லலாம். சாலை வழியாக 65 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். இது தவிர டெல்லி மற்றும் லக்னோவிற்கு பேருந்து வசதி உள்ளது. நீங்கள் விமான சேவையை எடுக்க விரும்பினால், அருகாமையிலுள்ள பந்த்நகர் விமான நிலையத்துக்கு வந்து இறங்கலாம்.
