Asianet News TamilAsianet News Tamil

சோட்டி தீபாவளி 2023 எப்போது? அதன் புராண முக்கியத்துவம் என்ன? எப்படி வழிபட வேண்டும்?

தனத்திரியோதசியில் தொடங்கும் தீபாவளி பண்டிகை பாய் தூஜ் உடன் முடிவடைகிறது. இந்த ஐந்து நாள் திருவிழாவில், நரக் சதுர்தசி என்றும் அழைக்கப்படும் சோட்டி தீபாவளி என்ற பண்டிகையும் உள்ளது.

Choti Diwali 2023: When is Choti Diwali 2023? What is its mythological significance? How to worship? Rya
Author
First Published Nov 6, 2023, 4:20 PM IST | Last Updated Nov 6, 2023, 4:20 PM IST

இந்துக்களின் மிகப் பெரிய பண்டிகை என்றால் அது தீபாவளி. இந்த தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் தீபாவளி என்பது ஒரு நாள் கொண்டாடப்படும் பண்டிகையாக இருந்தாலும், வட மாநிலங்களில் தீபாவளியை மக்கள் 5 நாட்கள் கொண்டாடுகின்றனர்.

வீட்டை சுத்தம் செய்து, இனிப்புகள் செய்வது, வீட்டை விளக்குகளால் அலங்கிரிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே மக்கள் தீபாவளிக்கு தயாராகி வருகின்றனர். குறிப்பாக தனத்திரியோதசியில் தொடங்கும் தீபாவளி பண்டிகை பாய் தூஜ் உடன் முடிவடைகிறது. இந்த ஐந்து நாள் திருவிழாவில், நரக் சதுர்தசி என்றும் அழைக்கப்படும் சோட்டி தீபாவளி என்ற பண்டிகையும் உள்ளது.

சோட்டி தீபாவளி எப்போது? இந்த ஆண்டு, சோட்டி தீபாவளி நவம்பர் 11, 2023 சனிக்கிழமை அன்று மதியம் 1:57 மணிக்குத் தொடங்கி நவம்பர் 12, 2023 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:44 மணிக்கு முடிவடையும்.

சோட்டி தீபாவளி - 12 நவம்பர் 2023
பெரிய தீபாவளி - 12 நவம்பர் 2023
ஸ்னான முஹூர்த்தம் - 12 நவம்பர் 2023, ஞாயிறு, காலை 5.28 முதல் 6.41 வரை.

சோட்டி தீபாவளி வரலாறு

கிருஷ்ண பகவான கார்த்திக் என்று அழைக்கப்படும் ஹிந்தி மாதத்தில் வரும் கிருஷ்ண சதுர்தசி அன்று  நரகாசுரனை வதம் செய்தார், எனவே சோட்டி தீபாவளி நாளில் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுகிறார்கள். அதே போல் இதே நாளில் தான் பகவான் ஸ்ரீ ராமரும் வனவாசத்தை முடித்துக் கொண்டு அயோத்திக்குத் திரும்பினார் என்று நம்பப்படுகிறது. இதனால் அவரை வரவேற்கும் விதமாக மக்கள் ராமர், அன்னை சீதா, லட்சுமணன் ஆகியோரை விளக்கு ஏற்றி வரவேற்றனர். . ஆனால் சாஸ்திரங்களின்படி, கார்த்திக் (ஹிந்தி மாதம்_ வரும் அமாவாசை நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது, ஏனெனில் இந்த நன்நாளில் லட்சுமி தேவி இரவில் பூமிக்கு வருவார் என்றும், அவரை மக்கள் விளக்குகள் ஏற்றி முறையாக வணங்கி வரவேற்கின்றனர் என்பதும் ஐதீகம்.

சோட்டி தீபாவளி அன்று  ஸ்ரீ கிருஷ்ணர், காளி மற்றும் எம தரமரை வழிபடும் சடங்கு உள்ளது. சோட்டி தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து குளிக்கவும். பிறகு கிருஷ்ணர் மற்றும் காளியின் மந்திரங்களை உச்சரிக்கவும்.
ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் அன்னை காளியைப் புகழ்ந்து பாடுங்கள். பின்னர் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் மா காளியின் ஆரத்தி எடுத்து,. இறுதியாக, உணவை பிரசாதமாக விநியோகித்து அதை உட்கொள்ளவும்.

அதன் பிறகு, மாலையில் எமதர்ம ராஜனுக்கு அர்ச்சனை செய்யும் போது தீபம் ஏற்றவும். வீட்டின் 5 மூலைகளிலும் 5 விளக்குகளை வைக்கவும். நல்லெண்ணெயில் தீபம் ஏற்றவும். தீபம் ஏற்றுவதற்கு கடுகு எண்ணெய், நெய் பயன்படுத்தக் கூடாது. உங்களால் ஐந்து விளக்குகளை ஏற்ற முடியவில்லை என்றால், ஐந்து விளக்குகளுடன் ஒரு தீபத்தை ஏற்றுங்கள்.
இத்துடன் சோட்டி தீபாவளி பூஜை நிறைவு பெறும்.

சோட்டி தீபாவளி : மகத்துவம்

சோட்டி தீபாவளி நாளில் கிருஷ்ணரை வழிபடுவது வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது.
அதே சமயம் இந்த நாளில் காளி தேவியை வழிபடுவதால் பயம் நீங்கி எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்றும், நம்பிக்கை. சோட்டி தீபாவளி அன்று எமதர்ம ராஜனுக்கு தீபம் ஏற்றினால் அகால மரண பயம் இருக்காது என்றும் நம்பப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios