chitra pavurnami special tomorrow dont miss to see it

சித்ரா பவர்ணமியான நாளை வருடத்தில் மிக முக்கிய நாளாக கருதப் படுகிறது

சித்ரா பவுர்ணமியன்று, நாளை மாலை சரியாக 6 மணிக்கு மாபெரும் அதிசயம் நிகழ உள்ளது.

என்னவென்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளதா ..?

ஆம். நாளை மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் அதே நேரத்தில் அழகாக சந்திரன் தோன்றும் காட்சியை பார்க்க முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரா பவுர்ணமி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதையும் குறிப்பாக பல கோவில்களில் பால அபிஷேகம் செய்து, பக்தர்கள் பால் குடம் எடுத்து கடவுளை தரிசனம் செய்வார்கள்.

ஆனால் சூரியன் மறையும் போது சந்திரன் தோன்றும் அறிய நிகழ்ச்சி உலகிலேயே இரு இடத்தில் மட்டுமே பார்க்க முடியும்.

1. கன்னியாகுமரி

2. ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த மலைப்பகுதியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாளை சித்ரா பவுர்ணமி என்பதால், இந்த அபூர்ப காட்சியை காண சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து எர்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது

எப்படி தோன்றும் இந்த காட்சி ..?

மாலையில் மேற்கு பக்கம் உள்ள அரபிக்கடலில், சூரியன் மறையும்

கிழக்கு பக்கம் உள்ள வங்கக்கடலில் சந்திர கடலில் இருந்து உதிப்பது போல் தோன்றும்

இதனை எங்கிருந்து பார்க்கலாம்.?

கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இருந்து பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கன்னியாகுமரி அடுத்த பழத்தோட்டம் என்ற இடத்தில உள்ள முருகன் குன்றத்தில் இருந்து இந்த அபூர்வ காட்சியை பார்க்க முடியும்

இந்த அற்புத காட்சியை பார்க்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால், நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு பேருந்துகள் விடப்பட்டு உள்ளது

மேலும் பாதுகாப்பும் பலப்படுதப்பட்டு உள்ளது.