முதல்வரின் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு..! மக்கள் வீட்டிற்குள் இருந்தாலே "எல்லாம்" கிடைக்கும்..! 

இன்று மாலை 6 மணி முதல் 144 தடி உத்தரவு அமலுக்கு வர உள்ளதால் மக்கள் அவரவர் சொந்த ஊருக்கு  திரும்பி வருகின்றனர். பலரும் வேலை இல்லாததால் கை செலவுக்கு பணமில்லாமல் இருக்கின்றனர். அவர்கள் யாரும் எந்த கஷ்டமும் அடையாமல் இருக்கவும், மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சேவையும் எளிதாக கிடைக்க முதல்வர் பல அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதன் படி 

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விலை இன்றி வழங்கப்படும்

குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.1000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். வருமானம் இழக்கும் நடைபாதை வியாபரிகளுக்கு ரூ.3,250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார். ரேசன் கடைகளில் விலையில்லா அரிசி, சக்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என கூறினார். 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாள் ஊதியம் வழங்கப்படும் என தெரிவித்தார்...இருக்கும் இடத்தை விட்டு நகர முடியாதவர்களுக்கு வீட்டிற்கு சென்று உணவு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இவை அனைத்தும் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்  எனபது மக்கள் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு நடந்துகொள்வது நல்லது