ரேஷன் அட்டைதாரர்களுக்கு இப்போதே பொங்கல் பரிசு ரெடி..! முதல்வர் அதிரடி  அறிவிப்பு..?!

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதன்படி ஒரு கிலோ பச்சரிசி சர்க்கரை கரும்பு திராட்சை முந்திரி அடங்கிய அனைத்தும் பொங்கல் பரிசு தொகுப்பாக மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதனுடன் ரூபாய் 1000 பரிசு தொகையாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். 

கள்ளக்குறிச்சி துவக்க விழா நிகழ்வில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு தெரிவித்து உள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வர இன்னும் ஒன்றரை மாதம் உள்ள நிலையில் இப்போதே திருநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்ற வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.