Asianet News TamilAsianet News Tamil

சிக்கன் பிரியாணி ரூ.30 : 2001-ம் ஆண்டின் மெனு கார்டு இணையத்தில் வைரல்.. ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்..

2001-ம் ஆண்டில் ஒரு உணவகத்தின் மெனு கார்டின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Chicken Biriyan at rs 30 this 2001 year menu card goes viral Rya
Author
First Published Nov 16, 2023, 12:48 PM IST | Last Updated Nov 16, 2023, 12:48 PM IST

காலம் மாற மாற விலைவாசியும் மாறிக்கொண்டே தான் இருக்கிறது. எனினும் சில ஆண்டுகளுக்கு முன்பு விலைவாசி எவ்வளவு குறைவாக இருந்தது என்பதை நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவதை கேட்டிருப்போம். அந்த வகையில் 2001-ம் ஆண்டில் ஒரு உணவகத்தின் விலை பட்டியலின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த மெனு கார்டில் தற்போது இருக்கும் சமகால விலையை விட விட 6 முதல் 7 மடங்கு குறைவான விலை இருப்பதை பார்க்க முடிகிறது. அப்போது சிக்கன் பிரியாணி, வெறும் ரூ. 30, மட்டன் பிரியாணி ரூ. 32, மற்றும் பன்னீர் பட்டர் மசாலாவின் விலை 24 ரூபாய் என்ற அளவிலே இருந்துள்ளது.

இந்த மெனு கார்டு இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், பலரும் இதுக்குறித்து தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், சூழ்நிலையில்  "இன்றைய சூழலில் நாம் மிகவும் பட்ஜெட்டுக்கு ஏற்ற உணவைத் தேடுகிறோம், ஆனால் இங்கே நான் இந்த விண்டேஜ் மெனுவில் உள்ள விலையுயர்ந்த உருப்படியைத் தேடுகிறேன்" என்று கேலி செய்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மற்றொரு பயனர்  "அப்போது, இது விலை உயர்ந்ததாக கருதப்பட்டது" என்று குறிப்பிட்டார். அதே போல் மற்றொரு பயனர் "எதுவும் மாறவில்லை; இப்போது எல்லா விலையிலும் ஒரு ஜீரோ சேர்ந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பணவீக்கத்தின் தாக்கத்தை சுட்டிக்காட்டிய மற்றொரு பயனர், "அப்போது ரூ.7ஆக முட்டை ரோல் இப்போது ரூ.70 முட்டை ரோலாக உருமாறியிருக்கிறது" என்று குறிப்பிட்டு, பல ஆண்டுகளாக விலைவாசி உயர்வின் வியக்க வைக்கும் யதார்த்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். 

தினமும் முட்டை சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

இந்த வைரல் மெனு கார்டு விலைகளின் பரிணாமத்தை மட்டுமல்ல, கடந்த இரண்டு தசாப்தங்களாக வெளிப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார இயக்கவியலில் உறுதியான மாற்றங்களையும் காட்டுகிறது என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios