வெண்டைக்காய் வச்சி இப்படி ஒருமுறை செட்டிநாடு ஸ்டைலில் சாதம் செஞ்சு சாப்பிடுங்க.. சூப்பரா இருக்கும்!

Vendakkai Sadam Recipe : செட்டிநாடு ஸ்டைலில் வெண்டைக்காய் சாதம் செய்வது எப்படி என்று இங்கு தெரிந்துகொள்ளலாம்.

chettinad style vendakkai sadam recipe in tamil mks

மதியம் வித்தியாசமான சுவையில் ஏதாவது சாப்பிட விரும்புகிறீர்களா? அதுவும் வெரைட்டி ரைஸாக. அப்படியானால் உங்கள் வீட்டில் வெண்டைக்காய் அதிகமாக இருக்கிறதா? அப்படி இருந்தால் அதில் செட்டிநாடு ஸ்டைலில் வெண்டைக்காய் சாதம் செய்து சாப்பிடுங்கள். 

வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, நீங்கள் செட்டிநாடு ரெசிபியை விரும்பி சாப்பிடும் நபர் என்றால் கண்டிப்பாக ஒரு முறை உங்கள் வீட்டில் இந்த ரெசிபியை செய்து பாருங்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் இந்த ரெசிபியை செய்து கொடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். மதியம் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் இந்த ரெசிபியை வைத்து கொடுங்கள் சந்தோஷப்படுவார்கள். முக்கியமாக இந்த ரெசிபி செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. சீக்கிரமே செய்து முடித்து விடலாம். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் செட்டிநாடு ஸ்டைலில் வெண்டைக்காய் சாதம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படிங்க:  கமகமன்னு மணக்கும் பூண்டு சாதம்.. ஒருமுறை செஞ்சு பாருங்க.. ருசியா இருக்கும்!

செட்டிநாடு ஸ்டைலில் வெண்டைக்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள் :

உதிரியாக வடித்த சாதம் - 1 1/2 கப்
வெண்டைக்காய் - 10 (சின்னதாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
கொட்டியான புளி கரைச்சல் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
லவங்கப்பட்டை தூள் - 1 ஸ்பூன்
முந்திரி - 10
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  குட்டீஸ்களுக்கு பிடிச்ச ஸ்வீட் கார்ன் ப்ரைடு ரைஸ்... ரெசிபி இதோ!

செய்முறை :

செட்டிநாடு ஸ்டைலில் வெண்டைக்காய் சாதம் செய்ய முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் வெண்டைக்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக அதில் மஞ்சள் தூள், கறிவேப்பிலை, இலவங்கப்பட்ட பொடி, மிளகுத் தூள், சிறிதளவு உப்பு மற்றும் புளிக்கரைசல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதனை எடுத்து அடுப்பில் மற்றொரு கடையை வைத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு ஆகியவற்றை போடவும். இப்போது இதில் தயாரித்து வைத்த வெண்டைக்காய் மசாலாவை இதனுடன் சேர்க்கவும். பின் இதில் உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்தே நன்றாக கிளறி விடுங்கள். அடுப்பை குறைவான தீயில் வைக்கவும். ஐந்து நிமிடம் சாதத்தை அடுப்பில் வைத்து கிளறி விடுங்கள் இப்போது அடுப்பை அணைத்து விடலாம். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் செட்டிநாடு ஸ்டைலில் வெண்டைக்காய் சாதம் தயார்.

இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios