வருகிறது அதிவேக ரயில்..! சென்னை- மைசூர் பயணம் "மூன்றரை மணி நேரம்" மட்டுமே..! 
 
சென்னை-பெங்களூர்- மைசூர் இடையே அதிவேக ரெயில் இயக்குவதற்கான திட்டம் மிக விரைவில்  செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை நே‌ஷனல் ஹை ஸ்பீடு ரெயில் கார்பரேசன் செயல்படுத்த உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது 

435 கிலோ மீட்டர் தூர வழித்தடத்தை கடக்க மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது.இதற்கான ஆய்வுப்பணி மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கான தொழில் நுட்பம், பாதை தேர்வு  செய்வது, இடம் தேர்வு செய்வது ஆய்வு பணி தற்போது தொடங்கி உள்ளது. இந்த அதிவேக ரெயில் இயக்கப்படும்போது சென்னை-மைசூர் இடையே 2 மணிநேரம் பயண நேரம் குறையும். இதற்கான டெண்டர் இந்த மாத  இறுதியில் வழங்கப்படும். 

பின்னர் இது குறித்த ஆய்வறிக்கையை ரெயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்து பின்னர் ஒப்புதல்  பெறப்பட்டு பணி தொடங்கும். நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில, மத்திய அரசு செயல்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த திட்டத்தை செயல்படுத்த 50 முதல் 60 மீட்டர் அகலமுள்ள நிலம் தேவைப்படும். அதிவேக  ரயில் சேவை நடைமுறைக்கு வந்தால் 50 சதவீதம் பயண நேரம் குறையும். உதாரணத்திற்கு சென்னையில் இருந்து பெங்களூருக்கு 6 மணி நேரம் என்றால் 3 மணி நேரத்தில் செல்ல முடியும். சகாப்த்தி ரயிலை பொறுத்தவரையில் சென்னையிலிருந்து மைசூருக்கு 7 மணி நேரத்தில் செல்ல முடிகிறது. 

தற்போது உள்ள விரைவு ரயில் இதுதான். இந்த நிலையில் அதிவேக ரயில் சேவை கொண்டு வந்தால் சென்னையிலிருந்து மைசூரு செல்ல வெறும் மூன்றரை மணி நேரம் மட்டுமே தேவைப்படும்.