"மானை" அடித்து மரத்தில் தொங்கவிட்ட "சிறுத்தைபுலி"..! கூடலூர் வனப்பகுதியில் நடந்த  அதிர்ச்சி காட்சி..! 

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் நடந்த ஓர் சம்பவம் தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கூடலூர் வனப்பகுதியை பொருத்தவரையில் புலி, மான் யானை சிறுத்தை கரடி என பல வன விலங்குகள் இருக்கக்கூடிய மிகச்சிறந்த இடம். இந்நிலையில் கூடலூர் தாலுகா ஸ்ரீ மதுரை ஊராட்சி அளவில் குங்கர்மூல் என்ற இடத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கூட பகுதிகளில் பொதுமக்கள் சென்று கொண்டிருந்தபோது, அங்கு இருந்த ஒரு மரத்தில் மான் ஒன்று இறந்த நிலையில் தொங்கியவாறு இருந்துள்ளது.

இதனை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்து வனக்காப்பாளர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டபோது மரத்தின் அருகே ஒரு விலங்கின் கால்தடம் இருந்து உள்ளது. அந்த படத்தை வைத்து ஆய்வு செய்ததில் அது சிறுத்தை புலியின் கால் தடம் என நிரூபணம் செய்யப்பட்டது. பிறகு இரவு நேரத்தில் அந்த சிறுத்தை புலி மானை வேட்டையாடிவிட்டு மரத்தில் வைத்துவிட்டு சென்று உள்ளது என தெரியவந்துள்ளது.எனவே மீண்டும் சிறுத்தைப்புலி அப்பகுதியில் இறைச்சைக்காக மானை தேடி உலா வர வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பீதியில் உறைந்து உள்ளனர்.

பிறகு மானின் உடலை  கைப்பற்றிய வனத்துறையினர், அதனை வனப்பகுதி நடுவே கொண்டு சென்று போட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது என்று உடனே வனத்துறையினர் கைப்பற்றி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று போட்டு உள்ளனர் இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.