உடனே உங்க “பேஸ்புக்” செக் பண்ணுங்க.....”இதை மட்டும்“ delete பண்ணுங்க ப்ளீஸ்...!!!
உங்கள் பணம் திருடு போகாமல் இருக்க, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது, ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகம் நாட்டம் செலுத்தும் நாம், இதையும் கவனிக்க வேண்டும். தொடர்ந்து ஆன்லைன் திருடர்கள் அதிகரித்து வரும் நிலையில், ஹேக்கிங் மூலம் எளிதாக பணத்தை திருடி மோசடியில் ஈடுபடுவதாக தொடர்ந்து செய்திகளை பார்க்கிறோம்.
குறிப்பாக, முகநூல் பக்கத்தில், பெயர் குறித்த முழுத் தகவலை பதிவிட வேண்டாம் என்றும், மேலும் செல்போன் எண், பிறந்த தேதி ஆகியவற்றையும் அதில் பதிவிட வேண்டாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதாவது, முகநூல் மூலம் பெயர், செல்போன் எண், மற்றும் பிறந்த தேதியை திருடும் ஆன்லைன் திருடர்கள், வருமானவரித்துறை இணையதளத்தில் அதனை பதிவிட்டு நம்முடைய பான் கார்டு எண்ணையும் பெற்றுக் கொள்கிறார்கள்.
அடுத்ததாக, பான் கார்டு தொலைந்து விட்டது என்று பதிவு செய்து புதிய பான் கார்டையும் பெற்றுக் கொள்கிறார்கள்.
மேலும், தொடர்ந்து செல்போன் தொலைந்து விட்டது என்று கூறி எஃப்ஐஆர் பதிவும் பெற்றுக் கொள்கிறார்கள். அதனைக் கொண்டும், பான் கார்டு ஆதாரத்தையும் கொண்டும் உங்களது செல்போன் எண்களை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். அதனையடுத்து, உங்களது ஆன்லைன் வங்கி கணக்கின் பாஸ்வேர்டு மறந்து விட்டது என்று கூறி, அதனையும் பெற்றுக் கொண்டு எளிதாக மோசடியில் ஈடுபடுகிறார்கள் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது மட்டுமில்லாமல், இந்த ஆன்லைன் திருடர்கள், தனிப் புரோகிராம்களை தயாரித்து, வங்கி இணையதளங்களை ஹேக்கிங் மூலம் முடக்கி , சர்வ சாதாரணமாக பணத்தை திருடி செல்கிறார்கள் .
இதற்கு முக்கிய காரணம், வங்கியில் இருந்து கொடுக்கப்படும் ஆன்லைன் கணக்குக்கான பாஸ்வேர்டுகளை மாற்றாமல், அதே எண்ணை பாஸ்வேர்டாக பயன்படுத்துவதே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், மற்றோரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இந்த ஆன்லைன் திருட்டில் ஈடுபடும் நபர்களின் 75 சதவீதத்தினர் நன்கு படித்த இளைஞர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக, நமது ஏடிஎம் பின் நம்பரை , மாற்ற வேண்டும் என வங்கிகள் தெரிவித்ததும், பழைய ஏடிஎம் கார்டை முடக்கி , புதிய ஏடிஎம் கார்டு வழங்க முடிவெடுத்ததற்கும் இதுதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
