டேட்டிங் செயலி மூலம் தினம் தினம் புது ஆள் தேடுவதும்... ஏமாந்து நடுரோட்டில் நிற்பதும்..! திக் திக் நிமிட பின்னணி...!

இன்று உலகமே சிறு போனில் அடங்கி விடுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.... அதிலும் குவிந்துகிடக்கும் ஏகப்பட்ட செயலிகளை தங்களுடைய மொபைல் போனில் பதிவிறக்கம செய்து ஒரு எல்லையே இல்லாமல் பயன்படுத்துகின்றனர்... விளைவு...கடைசியில் தனிமையை உணர்வது மட்டுமின்றி..பல எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும்..அப்படிப்பட்ட பிரச்னைகள் என்னெவென்று பார்க்கலாம்.  

சமூகவலைத்தளங்களை தவறாக பயப்படுதகுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்னவென்று பார்க்கலாம்..?

சமூகவலைத்தளங்களில் கொட்டிக்கிடக்கும் பல்வேறு டேட்டிங் செயலிகளை பதிவிறக்கம் செய்து... முன் பின் தெரியாத நபர்கள் முதல் போலியான புகைப்படத்துடன் ஆன்லைன் மோசடி செய்வபவர்கள் வரை அனைவரும்  இருக்கக்கூடிய ஒரு தளமாக இன்று சமூக வலைத்தளம் இருக்கிறது ...இன்னும் சொல்லப்போனால், டேட்டிங் செயலிகளில்.. இன்று இது பெஸ்ட் ... அடுத்து வேறு எது பெஸ்ட்டாக இருக்கும் என்ற எண்ணம் மேலோங்கி ....கடைசியில் தன்னையே ஆள் அட்ரஸ் தெரியாமல் போகும் நிலைமை வெகு தூரத்தில் இல்லை.. கடைசியில் சுய அடையாளத்தை இழக்க நேரிடுகிறது.

எளிதாக ஏமாற்றலாம்:

டேட்டிங் செயலியில் அறிமுகமாகும் நபர்கள் இன்று உங்களிடம் எப்படி பேசிக்கொண்டு உள்ளார்களா.. அதே நேரத்தில் மற்றவர்களுடனும் பேசிக்கொண்டு இருப்பார்கள். ஒரு வேளை அவர்கள் நம்பிக்கையானவர்கள் என கண்மூடித்தமாக நம்புவுவதும் பெரும் ஆபத்தில் சிக்க வைக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது 

ஒருவருடன் பழகும் போதும்  நேரில் பார்த்து பேசும் போதும்.. அவர்கள மற்றவர்களிடம் எப்படி பழகுகிறார்கள்... மற்றவர்களை எப்படி மதிக்கிறார்கள் என்பதை பொறுத்து தான் அவர்களை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும்... ஆனால் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமாகும் நபர்கள் மிக எளிதாக நம்மிடம் பல உண்மைகளை மறைத்து நாடகமாட முடியும் 

டேட்டிங் செயலி மூலம் ஒருவரை நேரில்  சந்திக்கும் போது பெரும் ஏமாற்றமாக கூட அமையலாம்.  ஏனென்றால் அந்த நபரைப் பற்றி உங்களுக்கு வேறுபட்ட கருத்து இருந்திருக்கும். மேலும் அவர்களை பற்றிய உங்களது எண்ணங்களுக்கு நேர்மாறாக அமையவும்  வாய்ப்பு  உள்ளது 

தனக்கு ஒரு  துணை வேண்டும் என  டேட்டிங்  செயலி மூலம் தொடர்ந்து தேடும் போது தொடர்ச்சியான நிராகரிப்பு, சரியான துணை அமையாதது இது போன்ற காரணத்தால் தங்களது உடல் அமைப்பை பற்றி சிந்திக்க தொடங்கி ... அது குறித்து எதிர் பாலினத்தவரிடம் பேசுவது என  தன்னை பற்றிய நம்பகத்தனமையே கேள்வி குறியாக்குகிறது.