சே குவேராவின் அரசு முறை பயணமாக இந்திய வருகைக்கு பிறகு 60 ஆண்டுகள் கழித்து அவருடைய மகள் கேரளா வந்து உள்ளார்.

பெரும் புரட்சியாளரான சே குவேராவுக்கும், அவருடைய இரண்டாவது மனைவி அலெய்ட்டா  மார்சுக்கும் பிறந்த மூத்த மகள் அலெய்ட்டா குவாரா, தற்போது கேரளா வந்துள்ளார். இவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பேபி, கேரளா சுற்றுலா மேம்பாட்டு கழக தலைவர் விஜயகுமார் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனைநேரில் சந்தித்து பேசினார். பின்னர் கட்சியின் பல முக்கிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார் குவாரா.

இதனை தொடர்ந்து, நாளை மறுதினம் கண்ணூரில் மகளிர் குழு ஏற்பாடு செய்துள்ள புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொள்ள இருக்கிறார். 2 ஆம் தேதி கேரள அரசு நடத்தும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் நடத்தும் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார். இதற்கு முன்னதாக 60 ஆண்டுகளுக்கு முன் அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்தார் சே குவேரா என்பது  குறிப்பிடத்தக்கது. 

60 ஆண்டு நிறைவு பெற்றதை அடுத்து, சென்ற வாரம் கியூபாவிலிருந்து குவாரா உள்ளிட்ட ஒரு குழு இந்தியாவிற்கு வருகைபுரிந்தது இது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது டெல்லியில் இடதுசாரி கட்சி தலைவர்களையும் சந்தித்துப் பேசினார் குவாரா. இந்த நிலையில் தற்போது கேரளா வந்து முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். இந்த நிகழ்வு வரலாற்றில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிது.