Asianet News TamilAsianet News Tamil

MBBS படிப்பிலும் மாற்றம்..! தெரியுமா இந்த சங்கதி..!


பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு மாணவர்களை திறம்பட உருவாக்க  அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. 

changes in mbbs syllabus
Author
Chennai, First Published Jul 6, 2019, 1:27 PM IST

MBBS படிப்பிலும் மாற்றம்..! தெரியுமா இந்த சங்கதி..! 

பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு மாணவர்களை திறம்பட உருவாக்க  அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக எம்பிபிஎஸ் படிப்பில் சேர வேண்டும் என்றால், நீட் தேர்வு எழுத கட்டாயமாக்கப்பட்டத்தை தொடர்ந்து, எம்.பி.பி.எஸ் படிப்பிலும் திருத்தும் கொண்டுவரப்பட்டு உள்ளது. 

changes in mbbs syllabus

அதன் படி, எம்.பி.பி.எஸ், படிப்பிற்கான,திருத்தியமைக்கப் பட்ட புதிய பாடத்திட்டம், இந்த கல்வியாண்டு முதல்நடைமுறைக்கு வருகிறது என டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்து உள்ளார்.

changes in mbbs syllabus

அதன் படி, இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுரையின் படி திருத்தியமைக்கப்பட்ட எம்பிபிஎஸ் புதிய பாடத்திட்டம், இந்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. இதில் சில முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு, முதல் ஆண்டிலேயே 60 மணி நேரம், நோயாளிகளை மாணவர்கள் நேரடியாக சந்தித்து, சிகிச்சை முறைகளை கற்பதற்கான வகுப்புகள் இதில் கொண்டுவரப்பட்டு உள்ளது. 

changes in mbbs syllabus
 
இதற்கு முன்னதாக, இரண்டாம் ஆண்டில் தான், மாணவர்களுக்கும், நோயாளிகளுக்கும் நேரடி தொடர்பு இருக்கும் வகையில் பாடத்திட்டங்கள் இருந்தன. ஆனால் இந்த முறை முதல் ஆண்டிலேயே பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, நோயாளிகளை எப்படிகையாள வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள  முடியும். 

மேலும் திருத்தியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டங்களை, மாணவர்களுக்கு திறம்பட கற்பிப்பதற்காக, பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக சுதா சேஷய்யன் தெரிவித்து உள்ளார் 

Follow Us:
Download App:
  • android
  • ios