ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று வெற்றிகரமாக புவி வட்டப்பாதையை சென்றடைந்தது.

இஸ்ரோ நிறுவனம், நாட்டின் தகவல் தொடர்பு, வானிலை உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ். எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், செயற்கைக்கோள்களை, விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. தற்போது, நிலவின் தென் துருவ பகுதியில் உள்ள கனிம வளங்கள் மற்றும் அங்கு மக்கள் வாழ சாத்தியம் உள்ளதா என ஆய்வு மேற் கொள்ள,'சந்திரயான் - 2' என்ற விண்கலத்தை, உருவாக்கியுள்ளது.இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தது..!  
   
இந்த செயற்கைக்கோள் மூலம்  நிலவு குறித்து பல முக்கிய விஷயங்கள் தெரிய வரும்... சென்ற வாரம் சந்திராயன்-2 ஏற்பட்ட பிரச்சினையை கண்டறிந்து அடுத்த 24 மணி நேரத்தில் பிரச்சினையை சரி செய்து விட்டோம். அடுத்த 36 மணி நேரத்தில் சோதனை செய்து ராக்கெட் சரியாக உள்ளது என்பதை உறுதி செய்து தற்போது வெற்றிகரமாக ஏவப்பட்டு உள்ளது. கடந்த முறை இது போல பிரச்சனையை சரி செய்ய ஒரு குழுவை அமைத்து இருந்தோம். இதற்காக கடந்த 7 நாட்களாக அந்த குழு உறங்கவே இல்லை... சுமார் 4 டன் எடையை சுமந்து செல்லும் வகையில், ஜிஎஸ்எல்வி தொழில்நுட்பத்தை இஸ்ரோ வெற்றிகரமாக மேம்படுத்தியுள்ளது.மேலும் அடுத்து வரும் ஒன்றரை மாதத்திற்கு இஸ்ரோவிற்கு பெரும் சவாலான நேரமாக அமையும்.காரணம் 15 கட்டங்களை நாம் கடக்க வேண்டி உள்ளது என்பதே... நிலவின் தென்பகுதிக்கு அருகே தரை இறங்குவது தான் நம்மோட இலக்கு. சந்திராயன் வெற்றிகரமாக ஏவப்பட்டதுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து உள்ளார்.