வங்க தேசத்துக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு..! குடியரசு தின அணிவகுப்பில் இடம் தர முடியாது..!  

வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின அணிவகுப்பில் மேற்கு வங்க அலங்கார ஊர்தி இடம் பெற மத்திய அரசு அனுமதி தர மறுத்துவிட்டது.வருடந்தோறும் குடியரசு தின விழா டெல்லியில் பிரமாண்டமாக நடைபெறும். இதில்  பல வெளிநாட்டு தலைவர்களை சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பு செய்வர்.

குறிப்பாக குடியரசு தின விழாவில் ஜனாதிபதி கோடி ஏற்றியவுடன் டெல்லி ராஜபாதையில் அலங்கார அணிவகுப்பு நடத்தப்படும். இதனை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். 

இந்த ஆண்டு நடக்க உள்ள பேரணியில் இடம் பெற  32 அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. அதேபோன்று அமைச்சகங்கள் சார்பாக 24 வகையான அலங்கார ஊர்திகளுக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆக மொத்தத்தில் 56 அலங்கார ஊர்திகளில், மாநிலங்களில் இருந்து எத்தனை ஊர்திகள் மற்றும் அமைச்சகங்களின் சார்பாக எத்தனை ஊர்திகள் அனுமதிக்கப்படும் என்று ஆலோசனை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் 22 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 16 ஊர்திகள் மாநிலங்கள் சார்பிலும், 6 அஊர்திகள் அமைச்சகங்கள் சார்பிலும் பங்கேற்ற அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் வங்க அலங்கார ஊர்தி இடம்பெற அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இதற்கு காரணமாக, பாதுகாப்பு அம்சங்களை மீறும் வகையில்  உள்ளதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்து உள்ளது. ஆனால் மத்திய அரசு திட்டமிட்டு தான் அனுமதி கொடுக்கவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி. குறிப்பாக பிரதமர் மோடியும் அமித் ஷாவும் கூட்டு சேர்ந்து மேற்கு வங்க அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் என தெரிவித்து வருகின்றனர்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போர்க்கொடி தூங்கியதால் தான் இவ்வாறு வங்க தேசத்துக்கு அனுமதி தர மறுத்துள்ளது மத்திய அரசு என விமர்சனம் எழுந்து உள்ளது.