Asianet News TamilAsianet News Tamil

கொரோனா வராமல் தப்பித்துக் கொள்ள இதைக்குடியுங்கள்... மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை..!

கொரோனா வராமல் தப்பித்துக் கொள்ள மத்திய ஆயுஷ் அமைச்சகம் இஞ்சி மஞ்சள் கலந்த  நாட்டு மருந்தை பருக பரிந்துரை செய்துள்ளது. 
 

Central AYUSH Ministry recommends to escape from Corona
Author
Delhi, First Published Jul 17, 2020, 6:27 PM IST

கொரோனா வராமல் தப்பித்துக் கொள்ள மத்திய ஆயுஷ் அமைச்சகம் இஞ்சி மஞ்சள் கலந்த  நாட்டு மருந்தை பருக பரிந்துரை செய்துள்ளது. 

கொரோனா தொற்றை தடுக்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் பொது மக்களுக்குப் பல்வேறு வழிகாட்டுதல்களை கூறி வருகிறது.  முன்னதாக “ஆர்கனிசம் ஆல்பம் 30” என்ற ஹோமியோபதி மருந்தை அறிமுகப்படுத்தி கொரோனாவைக் கட்டுப்படுத்த சிறந்த மருந்தாகச் செயல்படும் எனக் கூறியிருந்தது. தற்போது கொரோனாவை சுயக்கட்டுப்பாட்டில் வைப்பதற்கு “கபசுர நீர்” மிகுந்த பயனைத் தரும் என ஆயுஷ் அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது.Central AYUSH Ministry recommends to escape from Corona

அதனைத்தவிர ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி, யுனானி போன்ற மருத்துவ குணாம்சங்களைக் கொண்ட மருந்துகளை நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தலாம் என்றும் கூறியிருக்கிறது. நோய்த்தொற்றின் ஆரம்பத்தில் ஏற்படும் பெரும்பாலான நோய்களை இந்த மாதிரியான மருத்துவங்கள் முற்றிலும் கட்டுப்படுத்தி விடும். அதனால் ஒருவேளை நோய்த்தொற்று ஏற்பட்டாலும் தீவிரம் அடையாமல் தடுத்துவிடலாம் எனவும் கூறியிருக்கிறது.

Central AYUSH Ministry recommends to escape from Corona

துளசி இலை, இஞ்சிச்சாறு, மஞ்சள் கலந்த சுடுநிர் போன்றவற்றை காய்ச்சி அடிக்கடி பருகுவதால் நோய்த்தொற்று கிருமிகளிடம் இருந்து தனிநபர் பாதுகாப்பினை பெற முடியும். மிளகு நீருடன் தேன் கலந்து காய்ச்சி குடிக்கும்போது இருமல் போன்ற தொல்லைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். கொரோனா போன்ற பெருந்தொற்று நேரங்களில் பொது மக்கள் அவர்களுடைய சுய பாதுகாப்பினை அவர்களாகவே உறுதி செய்துகொள்ள வேண்டும். எனவே சமூக விலகல், பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios