மத்திய அரசு தெரிவித்த "ஹேப்பி  நியூஸ்"..! கடந்த 14 நாட்களில் புதிய வைரஸ் தொற்று இல்லை ..! 

தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சற்று ஆறுதல் தரும் விஷயமாக கடந்த 14 நாட்களில் நாடு முழுவதும் உள்ள 54 மாவட்டங்களில் எந்த ஒரு புதிய வைரஸ் தொற்றும் உறுதி செய்யப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். அப்போது இதுவரை புற்றுநோயிலிருந்து 2231 பேர் குணமடைந்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். அதேவேளையில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதில் கூடுதல் தகவலாக புதுச்சேரியின் மாஹி மற்றும் கர்நாடக மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் கடந்த 28 நாட்களில் யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என மேற்கோள் காட்டியுள்ளார்.

கொரோனாவிற்கு எதிராக தீவிர சிகிச்சை அளிப்பதற்கும் அறிகுறிகளை கண்டறிந்து உறுதி செய்வதற்கும் நாடுமுழுவதும் 755 மருத்துவமனைகளும் 1389 சுகாதார மையங்களும் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 4291 பேர் அதாவது, 29.8 % பேர் டெல்லி  மாநாட்டில் கலந்துக்கொண்டு வீடு திரும்பியவரக்ளும், அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு பரவியதும்  தெரியவந்துள்ளது. அவ்வாறு பாதித்த 23 மாநிலங்களில் தமிழ்நாடு - 84%, டெல்லி - 63% ,தெலங்கானா  -79%, ஆந்திரா -61% பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற தகவலையும் செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.