கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிரேதங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பின் கீழ் இயங்கும் 18 மயானங்களில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மிகுந்த மரியாதையுடன் பாதுகாப்பாக தகனம் செய்யப்பட்டு வருகிறது.  

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிரேதங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பின் கீழ் இயங்கும் 18 மயானங்களில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மிகுந்த மரியாதையுடன் பாதுகாப்பாக தகனம் செய்யப்பட்டு வருகிறது. 

இறந்த உடலுக்கான மதிப்பு, அதற்கு உரிய கண்ணியம் இந்த இரண்டையும் நாம் கெடுக்காமால் இந்த சடங்குகளை நாம் செய்ய வேண்டும் என சத்குரு அறிவுறுத்தி இருக்கிறார். அப்போது தான் இந்த நோக்கமே பூர்த்தியாகும் என அறிவுறுத்தி இருக்கிறார். உடல் தகனம் செய்ய வருகை தரும் அவர்களது சொந்தக்காரர்கள், உற்றார் உறவினர்கள் அனைவைரையும் பரிசோதித்த பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். தகனம் முடிந்து, சடங்குகள் முடிந்து அவர்களது உறவினர்கள் வெளியேறும்போது அவர்களுக்கு இருக்கிற அந்த மனநிலை, மனநிறைவோடு சொல்லி விட்டுப் போகிறார்கள்.

இங்கு ஒரு கோயில் போல் அமைதியான நிலையில், சடங்குகளை செய்து இறுதி மரியாதை செய்வதற்கு எப்படி நன்றி சொல்லப்போகிறோம் எனத் தெரியவில்லை . இதையெல்லாம் எங்கள் எதிர்பார்ப்புக்கு மேல் நடந்த செயலாக பார்க்கிறோம் என மனநிறைவோடு செல்கின்றனர். 

அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் உயிரையும் பணையம் வைத்து இச்சேவையை ஒரு வருடத்திற்கு மேலாக செய்து வருகின்றனர். இதுதொடர்பாக சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "ஈஷா மயானங்களில், காலமானவர்களை உகந்த சூழலில் நுண்ணுணர்வுடன் விடுவிக்க தன்னார்வத்தொண்டர்கள் அயராது உழைக்கிறார்கள். இது வாழ்வோருக்கும் விடைபெறுவோருக்கும் மிகவும் முக்கியம். ஆசிகள்" என்று தெரிவித்துள்ளார்.

ஈஷா சார்பில் கோவையில் 12 மயானங்களும், சென்னையில் 4, நாமக்கல் மற்றும் நெய்வேலியில் தலா ஒன்று என மொத்தம் 18 மயானங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் மருத்துவ உதவிகளை ஈஷா வழங்கி வருகிறது. அனைத்து மயானங்களும் நல்ல முறையில் தூய்மையாக பராமரிக்கப்பட்டும் வருகின்றன. 

சவால் மிகுந்த இப்பணியை மயான ஊழியர்கள் ஈஷாவின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதல் படி மிகுந்த பாதுகாப்பாக செய்து வருகின்றனர். அவர்களின் உடல் நலனில் ஈஷா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. தினமும் கப சுர குடிநீர் அல்லது நிலவேம்பு கசாயம் வழங்குவது, சத்தான உணவுகளை வழங்குவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் யோக பயிற்சிகளை கற்றுக்கொடுப்பது, தேவைப்படும் போது உடனுக்குடன் மருத்துவ உதவிகள் வழங்குவது போன்ற பணிகளை செய்து வருகிறது. 

ஈஷாவின் முறையான பயிற்சியின் காரணமாக, உயிரிழந்தவர்களின் உடல்களை மிகுந்த மரியாதையுடன் தகனம் செய்கின்றனர். இப்பணியில் ஈஷாவின் பிரம்மச்சாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆதரவளிக்கின்றனர். அங்கு கால பைரவர் சன்னதி இருப்பதால் அந்த இடம் ஒரு கோவில் போல் புனிதமாக பராமரிக்கப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால், மயானத்திற்கு வரும் இறந்தவர்களின் உறவினர்கள் ஈஷா ஊழியர்களின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.