தாராபுரத்தில் செல்போன் வெடித்து மாணவன் படுகாயம்

விலை உயர்ந்து செல்போன் முதல் சாதாரண செல்போன் வரை உலகில் ஏதோ ஒரு மூலையில் சில சமயத்தில் வெடிக்க தான்  செய்கிறது .

பல செய்திகளை கேள்வி பட்டிருப்போம்...விமானத்தில் திடீரென வெடித்த  சாம்சங் மொபைல்,பாடல் கேட்டுகொண்டிருந்த போது வெடித்த மொபைல்  என.... இதெல்லாம் ஒரு பக்கம்  இருக்க...இன்று, தாராபுரத்தில் மாணவர் ஒருவர் செல்போனை பயன்படுத்திவிட்டு  தன்னுடைய  சட்டை பாக்கெட்டில்  வைக்க  முற்பட்டு உள்ளார். அப்போதே வெடித்து சிதறி உள்ளது

9ம் வகுப்பு மாணவரான இவர், செல்போன் வெடித்து கால் கருகி படுகாயமடைந்துள்ளான். செல்போனில் பாடல் கேட்டு விட்டு கால்சட்டை பாக்கெட்டில் வைத்த போது வெடித்துள்ளது.

உடனடியாக  இந்த  மாணவனை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு  தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு  வருகிறது. மேலும் இது குறித்த விசாரணையும்  நடைபெற்று  வருகிறது.

எப்படி வெடித்தது..? போனில் என்ன பிரச்சனை ..? இது போன்ற  பல  கோணங்களில்  விசாரணை நடைபெற்று வருகிறது