கடலில் விழுந்த செல்போனை மீட்டி கொடுத்த அதிசய திமிங்கலம்..! 

நார்வே நாட்டில் தண்ணீரில் விழுந்த செல்போனை ஒரு திமிங்கலம் தன் வாயால் பிடித்து  மீட்டுக்கொடுத்த வீடியோ சென்றவாரம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

உளவு பார்க்கும் விதமாக ரஷ்யாவால் அந்த திமிங்கலம் அனுப்பப்பட்டு இருக்கலாம் என பலரும் விமர்சனம் செய்தனர். இதன்பின்பு அதிகாரிகள் இந்த திமிங்கலத்தை தொடர்ந்து சோதனை செய்து வந்தனர். 

இந்த நிலையில் பெலுக்கா இனத்தை சேர்ந்த திமிங்கலம் ஒன்று தண்ணீருக்குள் விழுந்த செல்போனை தன் வாயால் பிடித்து, அங்கிருந்த மக்களிடம் கொடுத்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. தொடர்ந்து ரஷ்யாவால் அனுப்பப்பட்டு உளவுபார்த்த திமிங்கலமும், தண்ணீரில் விழுந்தசெல்போனை பிடித்து மீண்டும் மக்களிடம் கொடுத்த திமிங்கிலம் ஒன்றுதான் என விமர்சனங்கள் செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த செயல்பாடு அனைவரையும் கவரும் வண்ணம் இருந்துள்ளது.