கோடி கோடியாய் சம்பாதிக்க இன்ஸ்டாகிராம்...!  

இன்ஸ்டாகிராம் முலமாக விளையாட்டு  மற்றும் சினிமா பிரபலங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் வருமானம் பெறுகின்றனர். 

பிரபலங்கள் இன்ஸ்டாகிராம் மூலமாக ஈட்டும் வருமானம் எவ்வளவு என்பது என்பதை பற்றி ஆண்டுதோறும் ஒரு பட்டியல் வெளியாகும். அந்த வகையில் இந்த வருடமும் பிரபலங்கள் தங்களது ஒவ்வொரு பதிவிற்கும் எவ்வளவு தொகையை வருமானமாக பெறுகின்றனர் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

team chanel 🎾💗

A post shared by Kylie ✨ (@kyliejenner) on Jul 20, 2019 at 1:33pm PDT

இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருப்பது ரியாலிட்டி ஷோ நட்சத்திரம் மொகுல் கெய்லி ஜென்னர். அந்த வரிசையில் 19 வது இடத்தை பிடித்து இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் ஒவ்வொரு பதிவிற்கும்  271,000  டாலரை பெற்றுள்ளார்.

விராட் கோலி ஒவ்வொரு பதிவிற்கும் 196,000 டாலரை பெற்று  23 வது இடத்தில் உள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.