செங்கோட்டையன் அதிரடி சரவெடி..!

பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் இனி ஜாதியை குறிப்பிடக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார். அதன்படி சீருடையில் மாற்றம், இலவச நீட் தேர்வு மையங்கள், ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு, மாணவ-மாணவிகளுக்கும் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு,கல்விக்கென தனி தொலைக்காட்சி, யூடியூப் சேனல்கள் என சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்நிலையில் டிசியில் இனி ஜாதி குறிப்பிடக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது. வருவாய் துறை வழங்கிய சாதி சான்றிதழே இறுதியானது என்பதால் பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

மற்ற துறை அமைச்சர்கள் அவரவர் வேலைகளில் பிசியாக செயல்பட்டு வந்தாலும், அதேவேளையில் பிரச்சாரம், எதிர்க்கட்சியினருக்கு தக்க பதிலடி கொடுப்பது என பிஸியாக இருக்கும் பட்சத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மட்டும் அவருடைய துறையில், மாணவ மாணவிகளுக்கு தேவையான கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து கொண்டு வருகிறார்.

இவருடைய ஒவ்வொரு செயலையும் பார்த்து பொதுமக்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். தற்போது வெளியாகியுள்ள இந்த அறிவிப்பும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.