உலக அளவில் இன்னும் மருந்துகள் கண்டு பிடிக்க முடியாத ஒரு சில நோய்களில் புற்று நோயும் அடங்கும். வயது வித்தியாசம் இன்றி பலரையும் தாக்கும் இந்த நோய்க்கு உலக அளவில் பல விஞ்ஞானிகள் மருந்து கண்டு பிடிக்க போராடி வருகின்றனர் எனினும் எந்த பயனும் இல்லை.

இந்நிலையில் புற்று நோயை மிக விரைவாக குணமாக்கும் அரிய மருந்து ஒன்று குயின்ஸ்லாந்தில் உள்ள மலை காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மருந்து ப்ளஷ்வுட் என்னும் மரத்தில் காய்க்கும் பழத்தில் இருந்து பெறப்படுகிறது. இந்த மருந்துக்கு பிரேக் டிரக் EBC-46 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த EBC-46 என்ற மருந்தை பூனை மற்றும் நாய் உள்ளிட்ட செல்ல பிராணிகள் மீது ஏற்கனவே சோதனை செய்து வெற்றி காணப்பட்டது.

இந்த மருந்தை தலை, கழுந்து உள்ளிட்ட இடங்களில் இருக்கும் கேன்சர் கட்டிகளில் தடவினால் ஒரே நாளில் அதாவது 24 மணி நேரத்தில் கட்டிகள் கருப்பாக மாறி பத்தே நாளில் அந்த கட்டிகள் கருகி கீழே விழுந்து விடுகிறது. பின் சருமம் பழைய நிலைக்கு திரும்பிடுகிறது. மேலும் கேன்சர் செல்களும் முழுமையாக அழிக்கப்படுகிறது.

இந்த பழத்தில் தயாரிக்கப்படும் மருந்து விரைந்து வேலை செய்வதை பார்த்து ஆராட்சியாளர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர். மேலும் இந்த மருந்தை மனிதர்கள் மேல் சோதனை செய்ய ஒப்புதல் அள்ளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.