கொரோனா அண்டாமல் இருக்க "பச்சை கற்பூரம்"..! வெளிவந்த ரகசிய தகவல்! 

பச்சை கற்பூரம் ஏற்றுவது என்றாலே அது ஒரு ஆன்மீகம் தொடர்பான விஷயமாகத்தான் மற்றவர்களுக்கு தெரியும். ஆனால் நம் முன்னோர்கள் சொன்ன எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்குப்பின் ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மைகளை தெரிந்துகொள்ளும் போது நமக்கு வியப்பாக இருக்கும்.

தற்போது கொரோனா அதிக அளவில் பரவி கொண்டிருக்கும் நேரத்தில் தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், கொரோனாவிற்கு பச்சை கற்பூரம் ஒரு முக்கிய கலவையாக பயன்படும் என டுவிட் செய்துள்ளார். ஆயுர்வேத முறைப்படி கற்பூரத்தில் இருக்கக்கூடிய கலவைகள் , கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பயன்படும் என்றும் இதற்கு முன்னதாக இன்புளுவென்சா, பிளேக் போன்ற நோய்களுக்கு எதிராக பச்சை கற்பூரம் மிகவும் பயன்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

இறை நம்பிக்கை கொண்டவர்கள் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்வது வழக்கம்.ஆனால் அந்த பச்சை கற்பூரம் ஏற்றுவதற்கு பின்பு இதில் எவ்வளவு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது என்று பாருங்கள். சமீபத்தில் இந்து அறநிலையத்துறை கூட கோவில்களில் கற்பூரம் ஏற்றுவதற்கு தடைவிதித்து இருந்தது. ஆனால் திறந்தவெளியில் கோவிலுக்கு வெளியில் கற்பூரம் ஏற்றுவது தற்போது பழக்கத்தில் இருக்கின்றது. இதற்கு காரணம் போலியான கற்பூரம் கலந்துவிடுவதால் மாசு ஏற்படுகிறது என அறநிலையத் துறையும் தெரிவித்து இருந்தது. ஆனால் அதற்காக இப்படி ஒரு அறிவியல் உண்மை இருக்கும்போது, தரமான பச்சை  கற்பூரத்தின் மகிமை நாம் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா?

கற்பூரம் ருமிகளை அழிக்கும் ஆற்றல் படைத்தது. கற்பூரம் எரியும் போது அதனுடைய புகை காற்றில் கலந்து பரவியிருக்கும் கிருமிகளை அழித்துவிடுகிறது. நாம் பயன்படுத்தக்கூடிய விக்ஸ், டைகர் பாம்-இல் கூட கற்பூரம் 5% இருக்கின்றது.விக்ஸ் வேபர் சுடுதண்ணீரில் போட்டு நாம் அதனை உள்ளிழுக்கும் போது இருமல் சளி உள்ளிட்டவை கட்டுக்குள் வந்து, நல்ல எளிதாக சுவாசத்திற்கு வழி கொடுக்கும்.

எனவே பச்சைக் கற்பூரத்தில் ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்கிறது என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த ஒரு தருணத்தில் பச்சை கற்பூரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்? எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதெல்லாம் குறித்து ஆய்வு நடத்தி மருத்துவர்கள் தெரிவித்தால் இந்த ஒரு தருணத்தில் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை கண்டிப்பாக நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.