விற்பனைக்கு  வருகிறது ஒட்டகப் பால் .....!!!

ஒட்டகப் பாலை விற்க, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, பல கட்டுபாடுகளுடன் ஒட்டகப்பால்  இன்னும் மூன்று மாதத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

பிரபல  நிறுவனமான அமுல்  நிறுவனம் , இன்னும் மூன்று மாதத்தில் ஒட்டக பாலை   விற்பனைக்கு  கொண்டு வரும் முயற்சியில் உள்ளது.

அதன்படி , முதலில் ஹைதராபாத்தில்  முதலில் விற்பனை  செய்ய  திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர்  அனைத்து  நகரங்களுக்கும்  விரிவாக்கம்  செய்யப்பட உள்ளதாக  செய்திகள்  வெளியாகி  உள்ளது.

சஹ்ஜீவன் என்பவர், குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பை அணுகி , அப்போது குட்ச் பகுதியில் ஒட்டகப் பாலை விற்பனை செய்ய அனுமதி கோரினார் என்பது  குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்த பின்னரே, ஒட்டகப் பாலை பொதுமக்கள் பயன்படுத்தும் உணவுப் பொருளாக அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.