கை பட்டாலே பல்ப் எரியுது... டெஸ்டர் மின்னுது..!

ஈரோடு மாவட்டம் மூணாம்பள்ளியில் நேற்று இரவு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பகுதியில் உயர்மின் அழுத்த கோபுரங்களை அமைத்து உள்ளதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது என மக்கள் அச்சம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது உயர் மின்னழுத்த கோபுரங்களில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகள் உடலில் பாய்கிறது என அச்சத்தில் உள்ளனர் அப்பகுதி மக்கள்.

இதனை நிரூபிக்கும் வகையில், டெஸ்டரை தன் உடலில் வைத்தால் மின்னுகிறது... பல்ப் வெறும் கைகளால் பிடித்தால் எரிகிறது.. வெளிச்சம் தெரிகிறது. இதை எல்லாம் அடிப்படையாக வைத்து பார்க்கும்போது, உடலில் மின்காந்த அலைகள் பாய்கிறது என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

எனவே விளைநிலங்களில் வைக்கப்பட்டுள்ள உயரழுத்த கோபுரங்களை அகற்ற வேண்டும் எனவும் மீண்டும் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்க கூடாது என வலியுறுத்தியும், இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இப்பகுதியில் நடந்துள்ள இந்த விஷயம் தற்போது ஈரோடு மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.