Budhan Peyarchi 2022 Palangal: ஜோதிடத்தின் படி, புதன் கிரகம் ரிஷப ராசியில் ஜூன் 3 ஆம் தேதி வக்ர நிவர்த்தியாகி பிற்போக்கு நிலையில் மாறி பயணிப்பார்.
ஜோதிடத்தின் படி, புதன் கிரகம் ரிஷப ராசியில் ஜூன் 3 ஆம் தேதி வக்ர நிவர்த்தியாகி பிற்போக்கு நிலையில் மாறி பயணிப்பார். புதனின் பிற்போக்கு இயக்கம், 12 ராசிகளுக்கும் நல்ல பலனையும், தீய விளைவுகளையும் ஏற்படுத்தும். புதனின் இந்த மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை தரும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு புதன் அருளால், இந்த நாள் சுபமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு புதன் அருளால் இன்று சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரித்து காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் அருளால் உங்கள் கனவுகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும், கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவை. போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு புதன் அருளால் சிறப்பான பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் காலம் சிறப்பாக காணப்படும். ஆரோக்கியம் சீராகும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு புதன் அருளால், இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் சச்சரவுகள் நீங்கும். குடும்பத்துடன் ஒற்றுமையுடன் காணப்படுவீர்கள். சுய தொழில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிக கவனம் அவசியம்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் அருளால், உங்களுக்கு நல்லது நடக்கும். தேவையற்ற அலட்சியம் இழப்புகளை ஏற்படுத்தும். தொட்டதெல்லாம் துலங்கும். சுபகாரியத் தடைகள் விலகும். கணவன் மனைவியிடையே வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு புதன் அருளால், நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். உங்களுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வீண் பழிகள் ஏற்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு புதன் அருளால், இந்த நாள் உங்களுடைய மன கவலைகள் நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். இருப்பினும், தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது அவசியம்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு புதன் அருளால், இன்று நேர்மறையான எண்ணங்கள் அதிகரித்து காணப்படும். எந்த ஒரு முக்கிய முடிவை சிந்தித்து எடுப்பது அவசியம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன் கொடுக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதன் அருளால், நீங்கள் புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் நிச்சயம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இறை சிந்தனையுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் பெருகும். ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதன் அருளால், சாதகமான சூழல் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். பெற்றோர், உறவினர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தகுந்த பலன் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதன் அருளால், தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களிடம் திறமைக்கு உரியஅங்கீகாரம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நன்மை பிறக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
