பட்ஜெட் 2019..! எந்தெந்த பொருள் விலை குறையும்..? எந்த பொருள் விலை அதிகரிக்கும்..? 

இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடித்த பாஜக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின்  இன்று முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மூலம்   எந்தெந்த பொருள் விலை உயரும் எந்தெந்த பொருள் விலை குறையும் என்பதை பார்க்கலாம்.

விலை அதிகரிக்கும் பொருட்கள்

பெட்ரோல் ,டீசல்,சிகரெட், குட்கா மற்றும் புகையிலை விலை உயரும். தங்கம்,வெள்ளி விலை அதிகரிக்கும். மேலும் இறக்குமதி செய்யப்படும் கார்கள்,ஏசி,லவுட் ஸ்பீக்கர்கள், டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர்கள் என இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் விலை உயர வாய்ப்பு  உள்ளது.

மேலும் இறக்குமதி செய்யப்படும் புத்தகங்கள்,சிசிடிவி கேமிராக்கள்,முந்திரி கொட்டைகள், துருப்பிடிக்காத உலோக பொருட்கள், இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் என அனைத்தும் சற்று விலை உயர்வை பெரும். 

விலை குறையும் பொருட்கள்

எலக்ட்ரானிக் வாகனங்கள், கேமிரா பாகங்கள் மற்றும் மொபைல் போன் சார்ஜர்கள், செட்-டாப் பாக்ஸ், உள்நாட்டு தயாரிப்பு பொருட்கள் என அனைத்தும் விலை குறைய வாய்ப்பு உள்ளது.இந்த பட்ஜெட்டை பொறுத்தவரையில் மக்களால் ஏற்றுக்கொள்ளும்படியான பட்ஜெட்டாக தான் பார்க்கப்படுகிறது.