செம்ம "மாஸ் திட்டத்தை" அறிமுகப்படுத்திய நிறுவனம்..! வாடிக்கையாளர்கள் ஹேப்பி..! 

ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ரூபாய் 318 திட்டடத்தில் 86 நாட்கள் கால அவகாசத்துடன் டேட்டா மட்டும் வழங்கக்கூடிய ஒரு திட்டத்தை அறிவித்து உள்ளது.

தற்போது இந்த திட்டம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா கர்நாடகா உள்ளிட்ட மாநிலத்தில் கிடைக்கப்பெறுகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தின்படி எந்த ஒரு குரல் அழைப்போ அல்லது எஸ்.எம்.எஸ் வசதியும் கிடைக்காது. 

அதாவது ஒரு நாளைக்கு... 2ஜிபி டேட்டா வீதம், 88 நாட்களுக்கு பயன்டுத்திக்கொள்ளும் வகையில் மொத்தம் 128 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஆனால் வேகம் 40kbps மேட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர்த்து மற்ற சில திட்டங்களும் இருக்கின்றது. அதன்படி ரூ.198 இல், 2ஜிபி டேட்டா தினமும்,  54 நாட்களுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோன்று 98 ரூபாய் திட்டத்தில் 24 நாட்களுக்கு, தினமும் 2 ஜிபி வீதம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதெல்லாம் தவிர்த்து ரூபாய் 548 திட்டத்தின்படி தினமும் 5 ஜிபி டேட்டா பயன்படுத்திக்கொள்ள முடியும்.90 நாட்கள் கால அவகாசம் உண்டு. சமீபத்தில் 998 ரூபாயில் 2 ஜிபி டேட்டா 240 நாட்கள் கால அவகாசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.